உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனம் போல வாழ்வு.

கியதையினால் பணக்காரணாகிற னென்றும் மனிதர் வழக்கமாகச் செய்யும் தீர்மானம், ஒரு விஷயத்தில் அயோக்கியனாயிருப்பவன் எல்லா விஷயங்களிலும், அயோக்கியனென்றும் ஒரு விஷயத்தில் யோக்கியனாயிருப்பவன் எல்லா விஷயங்களிலும் யோக்கியனென்றும் மேலெழுந்தவாறு கொள்ளும் அபிப்பிராயத்தின் முடிவாகும். ஆழ்ந்த அறிவையும் விரிந்த அநூபவத்தையும் கொண்டு நோக்குங்கால், அத்தீர்மானம் பிழையென்று காணப்படும். அவ் வயோக்கிய மனிதன் மற்றவனிடத்தில் இல்லாத அதிசயிக்கத்தக்க சில நல்லொழுக்கங்களை உடையவனா யிருக்கலாம்; அவ்வயோக்கிய மனிதன் மற்றவனிடத்தில் இல்லாத அருவருக்கத்தக்க சில தீய ஒழுக்கங்களை உடையவனாயிருக்கலாம். யோக்கியன் தனது யோக்கியமான நினைப்புக்களுடைய நல்ல பலன்களையும் தனது யோக்கியமான செயல் களுடைய நல்ல பலன்களையும் அடைகிறான் ; அவன் தனது தீய ஒழுக்கங்களால் உண்டாகும் துன்பங்களையும் அநுபவிக்கிறான். இது போல, அயோக்கியனும் தனது அயோக்கியதையால் உண்டாகும் துன்பங்களையும், தனது நல்ல ஒழுக்கங்களால் உண்டாகும் இன்பங்களையும் அடைகிறான்.

ஒருவன் தனது நல்லொழுக்கத்தினால் துன்பத்தை அடைகிறானென்று நினைத்தல் மனிதரின் வீண் பெருமைக்கு உகந்ததாயிருக்கிறது. ஒருவன் தனது அகத்திலிருந்து ஒவ்வொரு கெட்ட சினைப்பையும்,

32