பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மனம் போல வாழ்வு. கியதையினால் பணக்காரணுாகிற னென்றும் மனிதர் வழக்கமாகச் செய்யும் தீர்மானம், ஒரு விஷயத்தில் அயோக்கியனாயிருப்பவன் எல்லா விஷயங்களிலும், அயோக்கியனென்றும் ஒரு விஷயத்தில் யோக்கிய னாயிருப்பவன் எல்லா விஷயங்களிலும் யோக்கியனென் றும் மேலெழுந்தவாறு கொள்ளும் அபிப்பிராயத்தின் முடிவாகும். ஆழ்ந்த அறிவையும் விரிந்த அதுபவத் தையும் கொண்டு நோக்குங்கால், அத்தீர்மானம் பிழை யென்று காணப்படும். அவ் அயோக்கிய மனிதன் மற்றவனிடத்தில் இல்லாத அதிசயிக்கத்தக்க சில நல் லொழுக்கங்களை உடையவனா யிருக்கலாம்; அவ் யோக் கிய மனிதன் மற்றவனிடத்தில் இல்லாத அருவருக்கத் தக்க சில தீய ஒழுக்கங்களை உடையவனாயிருக்கலாம். யோக்கியன் தனது யோக்கியமான நினைப்புக்களுடைய நல்ல பலன்களையும் தனது யோக்கியமான செயல் களுடைய நல்ல பலன்களையும் அடைகிறான் ; அவன் தனது தீய ஒழுக்கங்களால் உண்டாகும் துன்பங்களை யும் அநுபவிக்கிறான். இது போல, அயோக்கியனும் தனது அயோக்கியதையால் உண்டாகும் துன்பங்களை யும், தனது நல்ல ஒழுக்கங்களால் உண்டாகும் இன்பங் களையும் அடைகிறான். ஒருவன் தனது நல்லொழுக்கத்தினால் துன் பத்தை அடைகிறானென்று நினைத்தல் மனிதரின் வீண் பெருமைக்கு உகந்ததாயிருக்கிறது. ஒருவன் தனது அகத்திலிருந்து ஒவ்வொரு கெட்ட சினைப்பையும், 32