பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




நினைப்பும் நிலைமையும்

அசங்கிய நினைப்பையும் அசுத்தினைப்பையும் வேருடன் கல்லித் தனது ஆன்மாவிடத்தினின்றும் ஒவ்வொரு பாவ மலத்தையும் ஒழிக்கிறவரையில், அவன் தனது துன்பங்கள் தனது நல்ல குணங்களின் பலன்கனென்றும் தியகுணங்களின் பலன்கல்லென்றும் அறியவும் சொல்லவும் உரியவனல்லன்; அவள் அபபரிபூரண தசையை அடைவதற்கு நெடுங்காலம் முன்னர், அதற்குரிய மார்க்கத்தில் செல்லும்போதே, முற்றிலும் நியாயமானதும், ஆதலால் தீமைக்கு நன்மையையும் நன்மைக்குத் தீமையையும் கொடுக்காததுமான பெரியபிரமாணத்தின் செயலைத் தனது மனத்திலும் வாழ்க்கையிலும் கண்டுகொள்வான். அவன் இந்த ஞானத்தை அடைந்தபிறகு, தனது பழைய அறியாமையையும் குருட்டுத்தனத்தையும் கண்டு, தனது வாழ்க்கை எப்பொழுதும் நியாயமாக விதிக்கப்பட்டிருந்ததென்றும், தனது பழைய இன்பதுன்ப அநுபவங்களெல்லாம் பரிணாமதசையிலிருந்த தனது ஆன்மாவின் நியாயமான வெளிவேலைகளென்றும் நன்கு தெரிந்துகொள்வான்.

நல்ல நினைப்புக்களும் செயல்களும் ஒரு காலத்திலும் கெட்ட பலன்களைக் கொடுக்கமாட்டா ; கெட்ட நினைப்புக்களும் செயல்களும் ஒரு காலத்திலும் நல்ல பலன்களைக் கொடுக்கமாட்டா. விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று மூளைக்குமா? எட்டியிலே கட்டுமாம்பழம் உண்ணலாமா? தினை விதைத்தவன்

33