________________
உன்னையும், சித்தார்த்தன் துறவு மறந்து செல்ல மனந்துணி கின்றேன்; ஆயினும், நீள்நிலம் உய்ந்திட நீயும் உய்ருவை; காரிகை யேதும் காதலில் மலர்ந்த மலரென உன்தன் வயிற்றினில் வளரும் மகவினைக் கண்டு வாழ்த்துதற் குரிய காலம் வரும்வரை காத்து நிற்போனல், மனத்தில், கொண்ட உறுதி குலைந்து போய்விடும். உண்மை ஞானம்இவ் வுலகெலாம் ஒளிரச் செய்வதென் கடனாம், சிறிது காலம் பிரிகின் றேன், இதில் பிழையெதும்.இல்லை, வாய்த்த மனைவியே! வயிற்று மகவே! தந்தையே! தமரே! தரணி மாந்தரே! 240 245 250 பொறுத்திட வேண்டும்; பொறுத்திட வேண்டும். பொறுத்துக் கொள்வது புண்ணிய மாரும் உள்ளம் தேறினேன்; உறுதியும் கொண்டேன், இனியொரு கணமும் இங்குத் தங்கிடேன். யாதுந் தடையிலை; இறங்கிச் செல்வேன். 253- நீள்நில மீது நித்தியா வந்த வாழ்வை யடையும் வழிஇது வென்று தீவிர மான தியாகத் தாலும் ஓய்வில் லாத உழைப்பினாலும் அறியலா மென்னில் அறிந்து வருவேன்; 260 வாடி வருந் மன்னுயி ரெல்லாம் அடையும் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன் என்று கூறி இரவில் இறங்கினன், நன்று நாடிய ஞானிசித் தார்த்தனே.