பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனக்காட்சிகளும் இலக்ஷியங்களும்.

கள்.கம்மியத்தொழில் செய்திருந்த நீங்கள் இவ்வுலகத்தைச் சீர்திருத்துமாறு உங்கள் வாளையும் இழைப்புளியையும் ஒழித்துவிடுவீர்கள்."

ஆலோசனையில்லா தவர்களும் பாமரர்களும் சோம்பர்களும் சங்கதிகளைக் கவனிக்காமல் அவைகளின் வெளிப்படையான காரியங்களை மாத்திரம் பார்த்துயோகமென்றும், அதிர்ஷ்டமென்றும், தற்செயலென்றும் பேசிக்கொள்வதுண்டு. ஒருவன் பணக்காரனாகிறதைப் பார்த்து, "இவன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி! என்கின்றனர். மற்றொருவன் புத்திசாலியாயிருக்கிறதைப் பார்த்து, "இவனுக்கு எவ்வளவு நல்ல பாக்கியம் கிடைத்திருக்கிறது !" என்று வியந்துரைக்கின்றனர். வேறொருவனது மஹனீய குணத்தையும் விரிந்த செல்வாக்கையும் பார்த்து இவனுக்கு ஒவ்வொரு வழியிலும் எப்படித் தற்செயலாக உதவிகன் நேரிடுகின்றன !" என்கின்றனர். இவர் தமது அநுபவங்களைப் பெறுதற்கு விருப்பத்தோடு பட்டிருக்கிற கஷ்டங்களையும், அடைந்திருக்கிற தவறுதல்களையும்,செய்திருக்கிற போராட்டங்களையும் அவர் பார்க்கின்றிலர்; இவர் ஹிருதயத்தின் காட்சியைப் பிரத்தியக்ஷத்தில் கொண்டுவருதற்கும், இவருடைய மார்க்கங்களில் கடக்கமுடியாதனவாகத் தோன்றிய இடையூறுகளை நீக்குதற்கும் இவர் செய்திருக்கிற பரித்தியாகங்களையும், துணிகரமான முயற்சிகளையும், இவர் கொண்டிருந்த கொள்கைகளையும்பற்றி அவர்கள் ஒன்றும் அறி

63