52 ஆசிய ஜோதி இடையரைக் கண்டு வினவுதல் வேறு என்றுகனிந் துளமுருகி எழுந்த காலை, எமன்விட்ட தூதுவர்போல் ஆட்டை யெல்லாம் குன்றிருந்து துரத்திவரு மவரைக் கண்டு, குவலயத்தில் அருள்மாலி பொழியும் ஐயன் : வேறு "மாலைப் பொழுதின்னும் ஆகவில்லை- வெயில் மண்டை பிளந்து வெடிக்குதையோ! சாலை வழிஇந்த ஆடுகளும் - எங்கு சாய்ந்து செலுமையா கூறும்” என்றான். இடையர் மறுமொழி கூறுதல் அம்மொழி கேட்டவ் விடையருமே-11எம்மை ஆளும் இறைவன தாணையினால், செம்மறி நூறு, வெள் னாடும் ஒருநூறு சேர்த்து வருகிறோம் என்றுரைத்தார். இன்றிரா யாகம் முடியுதென்றார்-அதில் இத்தனை யுங்கொலை யாகும்என்றார்; நின்றுசொல நேரம் இல்லை என்றார் - இன்னும் நீண்ட வழிபோக வேண்டும்என்றார். வள்ளலும் உள்ளம் வருந்தி, யானும்-அந்த மாமகம் காண வருவேனென்று, துள்ளும் மறியுஞ் சுமந்துகொண்டு-தாயும் சேர்ந்து தொடர வழிநடந்தார். LB 18 13- 14. 15.
பக்கம்:ஆசிய ஜோதி.pdf/53
Appearance