உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஆசிய ஜோதி செம்பு நிறைந்துபால் சிந்திடவே-சிலர் சிந்தை மறந்து கறந்துநின்றார்; எம்பிரான் செல்லும் வழியின் சிறப்பெலாம் எங்ஙனம் சொல்லிமுடிப்பேன். அம்மா' வேறு வையமிசை உயிர்கள்படும் துயரை எண்ணி மறுகும் உளத்து அயலொன்றும் அறியா னாகி, ஐயனும்அவ் வீதிவழி நடந்து மன்னன் அரியமகம் செய்யுமிடம் அணுகி னானே. யாகசாலை வருணனை வேறு தாரணி மன்னவன் பிம்பிசாரன்-யாக சாலை நடுவினில் வந்துநின்முன்; ஆரணம் ஓதிய அந்தணரும்-திரந்து அங்கிரு பக்கமாய்க் கூடிநின்றார். மந்திரம் ஓதி எரிவனர்த்தார்-புகை வானை யனாவி எழுந்ததம்மா! இந்தன மிட்டுப் பெருக்கிதின்றார்-தீயும் ஏழுநா விட்டுச் சுழன்றதம்மா! பண்டங்கள் வாரி இறைத்தாரம்மா!-சோம பானங்கள் அள்ளிச் சொரிந்தாரம்மா! குண்டம் நிறையநெய் விட்டாரம்மா!-எரி கோபுரம் போல உயர்ந்ததம்மா! 34. மகம்-யாகம்; 36. இந்தனம்- விறகு 33 34 35 36 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/57&oldid=1503937" இலிருந்து மீள்விக்கப்பட்டது