இணையற்ற வீரன் பேரால் உனக்கு ஆதரவுதந்த உனது சக்ரவர்த்தி யிடம் நீ கூறுவதை யோசித்துக் கூறமாட்டாயா? நன்றி கெட்டவனே ! தமிழ்த் தன்மையின் வேரைப் பறிக்கத்தக்க அசட்டு வார்த்தையை என்னிடம் அஞ்சாமற்கூற முன்வந்தாயா? எனக்கிருப்பதாக நீ நினைத்திருந்த அறிவுடமையை உனது மூடத் தனத்தையிட்டுக் குழப்பிவிட நினைத்த உன் நெஞ்சம் எனது தோளையும் 57 கருங்கல்லா? வாளையும் பேடித்தனம் பொருந்தியவை என்ற முடிவுக்கு வந்தாயா? மூடனே! மானத்தோடு பேசு! நடந்ததென்ன? [ஆசனத்திலிருந்து குதித்து எதிர் வந்து நிற்றல்.) சேனாதிபதி:- (பயத்தோடு) பெருமானே! தங்கள் கோபத்துக்குக் கரரணம் தோன்றவில்லையே! என் வார்த்தையில் தங்கட்கே அவநம்பிக்கை தோன்றுங் காலமும் வந்துவிட்டதா? ப்ரபூ! நடந்தது உண்மை! என் வார்த்தையை நீங்கள் நம்ப முடியா விட்டால் இப்பாவியைத் தங்கள் வாளால் பிளந்து போடுங்கள். சோதி இரணியன்:- [நிதானிக்கிறான் - பிறகு கெஞ்சிய முகத் தோடு) அப்பனே, உண்மைதானா? தோன்றும் என்பதையாவது நீ நம்புகிறாயா? நீயே ஆரியர் சூழ்ச்சியை அறியாவிட்டால், அவர்கள் சொல்லும் கடவுள், காராயணன் என்பதை நீயே ஏற்றுக்கொள்வது போல் பேசுவாயானால், இந்நாட் டுச் சாதாரண தமிழ் மக்கள் கதி என்னவென்பதை யோசித்துப்பார். நீ சொல்லும் இந்த
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/76
Appearance