உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$60 ஆசிய ஜோதி மேடையில் நீங்களும் மூடிப் படுத்திட மெல்லிய கம்பளி தானனித்து வாடையி லாடிக் கொடுகுவதும்-அதன் வஞ்சகச் செய்கையோ, சொல்லும் ஐயா? 33 அம்புவி மீதில்இவ் வாடுகளும்-உம்மை அண்டிப் பிழைக்கும் உயிரலவோ? தம்பி யிருப்பவர் கும்பி எரிந்திடில் தன்மை உமக்கு வருமோ ஐயா? காட்டுப் புலியுன் கொடுமையஞ்சி-உங்கள் கால்நிழல் தங்கிய ஆடுகளை நாட்டுப் புலியெனக் கொல்லுவதோ? - அந்த நான்மறை போற்றிய நீதிஐயா? மண்ணில் வளர்த்திடும் புல்லையுண்ணும்-வான மாரி பொழிந்திடும் நீரையுண்ணும்; எண்ணிநீர் செய்யும் உதவியென்னாம் - இதை ஏஞோ உணர்ந்திலீர் மானிடரே! பிள்ளையைக் சொன்று கறி சமைத்தீர்- அதன் பெற்றோரை உண்ண அழைத்துதின்றீர்: வள்ளலே உள்ளத் தெளித்தவரே - இது வாழ்வை யலிக்கும் செயலாமோ? மன்னுயி ரெல்லாம் உலகில்-ஒருதாயின் மக்களென் றுண்மை அறிந்திலீரோ? தன்னுயிர் போற்றிப் பெரும்பழி செய்வது சண்டாளர் கண்ட நெறியலவோ? 53. கொடுகுவது - குளிரால் நடுங்குவது. 54 35 56 57 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/61&oldid=1504303" இலிருந்து மீள்விக்கப்பட்டது