பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 39 கள் திராவிட மொழி இயல்பை அடிப்படையாகக் கொண்டன' என்று திரு.எட்டுவர்டு தாமசு கூறுகின்றார். "பிராமணர்கள், தமிழ் நாட்டில் குடியேறுவ தற்கு முன்னரே தமிழர்கள் எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர். பிராமணர்கள் அப்போது அங்கு வழக்கத்திலிருந்த தமிழ் வரி வடிவெழுத்துக்களோடு சமசுகிருத ஒலிகளை வெளியிடக் கூடிய சில வடி வெழுத்துக்களையும் சேர்த்துத் தமிழ் வரி வடி வெழுத்துக்களைத் திருத்தி அமைத்தனர்" என்று திரு. எல்லிசு கூறுகின்றார். ஆனால் கால்டுவெல் அவர்கள் இக்கூற்றுக்களில் ஐயப்பாடு கொள்கின்றார். .. தமிழ் மொழியில் எழுத்தையும் நூலையும் குறிக்க வழங்கும் தனித் தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பது உண்மையே எனினும், பிராமணர்கள் இந் நாட்டில் முதன் முதலாகக் குடியேறியதற்கு முற்பட்ட காலத்தில் தமிழில் வரி வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்டவல்ல அகச் சான்றுகள் கிடைத் தில" என்று கால்டுவெல் கூறுகின்றமை, கால்டுவெல் தொல்காப்பியத்தைக் கற்கும் வாய்ப்புப் பெறாத தனால்தான். கால்டுவெல் காலத்தில் தொல்காப்பியம். புலவர் வீட்டுப் பரண்களிலிருந்து விடுபட்டு வெளிப் போந்திலது. அதனால் அப்பொழுது தமிழ்ப் புலமைக் காகப் பயிலப் பெற்ற நன்னூலையே கற்றார். அதுவே தமிழில் உள்ள பழமையான இலக்கண நூல் என்று குறிப்பிட்டார். தொல்காப்பியத்தைக் கற்றிருப்பின் அவ்வாறு கூறியிரார் அன்றோ? ஒலி வடிவங்களும் வரி வடிவங்களும் தமிழில் ஒலி வடிவ எழுத்துக்கள் முப்பத்து மூன்றும் வரி வடிவ எழுத்துக்கள் முப்பத்தொன்று