உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைக்காடு/சுகாதார வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

சுகாதார வாழ்வு!

(மாமயிலேறிநீ வா மகாநுபாவா என்ற மெட்டு]

பல்லவி

நோயினைப் போய் அழிப்பாய்
நூறாண்டு வாழ்வாய்!

(நோ)


சரணம்


ஆயநன் னெஞ்சில் வேண்டும்நல் வீரம்
தேயத்தில் தேகத்தில் வேண்டும்சுகா தாரம் (நோ)

அசுத்தமும் இருட்டும் புறத்தும் நல் லகத்தும்
அகற்றுக நீ தமிழா ஆநந்தம் உனை நத்தும் (நோ)

வாழ்க்கையின் கடுவே வரஎண்ணும் சாவைப்
போக்கிட நோய்களில் அசுத்தத்தில் "தீ" வை! (நோ)

அயர்வினில் தொடரும் துயரெனும் சேதி
அறிவுலகினில் இல்லை; ஏறடா அதன் மீதில்! (நோ)