உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைக்காடு/௸

விக்கிமூலம் இலிருந்து

கண்டதும் காதல்

இரா: அடாணா.

அடதாளம்.

பல்லவி

களிப்பில் ஆடும் கான மயிலோ
காதாரும் பண் பாடும் குயிலோ? (களிப்)

அனுபல்லவி


துளிக்கும் மது மலரின் தேகம்
சுகம் தரும் இவள் அளிக்கும் போகம்! (களிப்)

சரணம்


பளிக்குமேனி கண்டு மனந்தத் தளிக்குதுடல் கொப்பளிக்குதே!
ஒளிக்குதே இம் முகவிலாசம் உளத்தில் மோகம் தெளிக்குதே!

வளர்க்கா தெழில் வளர்ந்த ரூபம்
வையம் விளங்க ஏற்றும் தீபம்! {களிப்)
கலைத்துக் கலைத்து வரைந்த சித்திரமோ
கவினுறும் விழி வேலோ!
ஒலிக்கெலாம் உயிர் தரும் இவள் மொழி
இனிப்புச் சேர்த்திட்ட பாலோ!
தலைக்கேறுதே கொண்ட மோகம்
தகிக்குதே இதென்ன வேகம்! (களிப்)

"https://ta.wikisource.org/w/index.php?title=முல்லைக்காடு/௸&oldid=1508164" இலிருந்து மீள்விக்கப்பட்டது