முல்லைக்காடு/ஏற்றப் பாட்டு
Appearance
ஏற்றப்பாட்டு
- ஆழஉழுதம்பி அத்தனையும் பொன்னாம்!
அத்தனையும் பொன்னாம் புத்தம்புது நெல்லாம்!
- செட்டிமகள் வந்தாள் சிரித்துவிட்டுப் போனாள்!
சிரித்துவிட்டுப் போனாள் சிறுக்கி துரும்பானாள்!
- ஆற்றுமணல்போலே அள்ளி அள்ளிப் போட்டாள்
அத்தனையும் பொன்னாம் அன்புமனந் தாண்டி!
- கீற்று முடைந்தாளே கிளியலகு வாயாள்
நேற்றுச் சிறுகுட்டி இன்று பெரிசானாள்!
- தோட்டங்கொத்தும் வீரன் தொந்தரவு செய்தான்
தொந்தரவுக் குள்ளே தோழிசுகம் கண்டாள்!