முல்லைக்காடு/கல்வி
Appearance
4. சிறுவர் பகுதி
கல்வி
(மகாவதி குண மாதர வேகமாய் எ-மெ)
(தந்தை தநயனுக் குரைத்தல்)
1. சுல்வியின் மிக்கதாம் | செல்வமொன் றில்லையே |
கண்மணி கேளடா | நீஎன்றன் சொல்லையே! |
செல்வம் பிறக்கும்நாம் | தந்திடில் தீர்ந்திடும், |
கல்வி தருந்தொறும் | மிகச் சேர்ந்திடும் |
2. கல்வியுள்ளவரே | கண்ணுள்ளார் என்னலாம் |
கல்வியில்லாதவர் கண் | புண்ணென்றே பன்னலாம் |
கல்வி மிகுந்திடில் | கழிந்திடும் கடமை! |
கற்பதுவே உன் | முதற் கடமை. |
3. இளமையிற் கல்லென | இசைக்கும் ஔவையார் |
இன்பக் கருத்தை நீ | சிந்திப்பாய் செவ்வையாய்! |
இளமை கழிந்திடில் | ஏறுமோ கல்விதான்? |
இப்பொழு தேயுண் | இனித்திடும் தேன், (கல்) |