பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

35

தஞ்சையில் இருந்த சுவார்ட்ஸ் பாதிரியார், மறவர் சீமையில் மேல்நாட்டு முறையில் கல்வியை போதிக்கும் பள்ளிகளைத் துவக்க முன்வந்தார். தஞ்சாவூரில் கும்பெனியாரது பிரதிநிதியாக இருந்த சுல்லிவன், ஆங்காங்கு உள்ள அரசர்கள் பெரு நிலக்கிழார்களது ஆதரவைக் கொண்டு மேனாட்டு கல்வி முறையை தமிழகத்தில் தென்பகுதியில் பரப்புவதற்கான திட்டம் ஒன்றை சுவார்ட்ஸ் பாதிரியாரிடம் வரைந்து கொடுத்தார். இராமநாதபுரத்தில் அதற்கான பள்ளியொன்றை நிறுவுதல் சம்பந்தமாக பாதிரியார் இராமநாதபுரம் அரசரைச் சந்தித்து அந்தக் கல்வித் திட்டம் பற்றி விளக்கம் தந்த பொழுது, 'இது ஒரு சிறந்த திட்டம். இங்கு ஒவ்வொரு ஊரிலும் இத்தகைய பள்ளி நிறுவப்பட வேண்டும்' என்று தமது பேராவலை மன்னர் பாதிரியாரிடம் தெரிவித்ததுடன் அதற்கான ஆதரவு வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்தார். இராமநாதபுரத்தில் நிறுவப்பட்ட இந்தப் பள்ளியைத் தொடர்ந்து சிவகங்கையிலும், பின்னர் தஞ்சாவூரிலும் நிறுவப்பட்டன. இந்த நல்ல முயற்சியை கவர்னரும், ஆற்காட்டு நவாப்பும் வெகுவாகப் புகழ்ந்தனர். இந்த புதுமையான முயற்சிக்கு சேதுபதி மன்னர் முழு ஆதரவு வழங்கியதுடன் இராமநாதபுரம் கோட்டையில் துவக்கப்பட்ட இத்தகைய பள்ளிக்கு மாதந்தோறும் முப்பது பக்கோடா பணம் மான்யம் வழங்கி வந்தார்.[1]


அடுத்தபடியாக அன்றைய சமுதாய மக்களது இறை உணர்வு காரணமாக ஆலயங்களும், அன்னசத்திரங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இவைகளைப் பராமரிப்பதிலும் பழுதுபார்த்து நல்ல நிலையில் வைத்துக் கொள்ளவும் அன்றாட வழிபாடு, விழா, தர்மம் ஆகியவைகளை நடத்துவதிலும் சிறந்த கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இராமேஸ்வரம், திருப்புல்லணை, திருச்சுழியல், திருவாடானை, நயினார் கோவில், பெருவயல் போன்ற சேது நாட்டின் புனித தலங்களில் பெருங்கோவில்களை உருவாக்கி அவைகள் என்றென்றும் சிறந்த தலங்களாக விளங்குவதற்காக பல ஊர்களை அவை கருக்கு சர்வமான்யமாக வழங்கப்பட்டன.[2] அந்த கோவில்


  1. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 129.
  2. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 252, p. 121.