பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


போக்கு, கலகம் விளைவித்தல், கட்டுக்கு உட்பட மறுத்தல் ஆகியவை எழ காரணமாகிறது என்று கருதுகிறேன்.

நம் நாட்டு இளைஞர்களிடம் குறிப்பாக மாணவரிடம் கேடு நிறைந்த இயல்புகள் மிகுந்து விட்டிருப்பதாகப் பலர் கவலை தெரிவித்துள்ளார்கள். நான், நம் நாட்டு இளைஞர்களிடம் குறிப்பாக மாணவரிடம் நம்பிக்கை இழந்துவிடவில்லை; மாறாக அவர்களின் இயல்பிலே அடிப்படையான கோளாறு எதுவும் இல்லை. அவர் முன் குறிக்கோள் சீரிய முறையிலே காட்டப்படாததாலும் அறிவுரை வழங்கிடும் அன்பர்களில் பலரும் தன்னலப் பிடியினிற் சிக்கித் தகாதன செய்கின்றனர் என்பதைக் காண நேரிடுவதாலும் அவர்கள் இயல்பு திரிந்து விடுகிறது--நேர்வழி அடைபடுகிறது--கேடு தரும் முறைகள் இனிப்பளிக்கின்றன--என்று கருதுகிறேன்.

எனவே இளைஞரும் மாணவரும் நல்லியல்புடன் இருந்திட வேண்டுமெனில், மற்றையோர், நமது சொல்லும் செயலும் பொது நலனுக்கு உகந்ததாக அமைந்திடுமென்று பார்த்துக் கொள்வது இன்றைய அவசரத்தேவை என்பதைக் கூறிட விழைகின்றேன்.

அதேபோது மாணவர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு எத்தனை அருமை மிக்கது என்பதனை உணர்ந்து அதற்கேற்பத் தமது செயலினை வகுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தந்தையின் கழுத்திலே பூட்டிடவோ, கத்தும் கடல் மூழ்சி முத்தெடுப்பார். தனக்கென வந்துள்ள தையலன்றோ அதற்கு உரியாள்!

அரைத்தெடுத்துப் பூசி மகிழ்தற்கன்றோ சந்தனம்!--அடுப்பு எரிப்பதற்கோ? பட்டம் பெறுவதும் பயிற்சி பெறுவதும் நாட்டினருக்கு நல்வாழ்வு தந்திட! எனக்கென்ன