பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


புத்தர் சொன்னார்--சித்தர் கூறினார்--மகாவீரரும், முகம்மது நபியும், காந்தியடிகளும், இராமலிங்க அடிகளும் சொன்னார்கள் என்று தான் சொல்கிறோமே தவிர, அவற்றை செய்து காட்டுகின்றோமா?

‘அவர் அப்படிச் சொன்னார்--இவர் இப்படிச் சொன்னார்' என்று கூறிவிட்டு, 'நீ என்ன செய்யப் போகிறாய்?' என்றால் விழித்து நிற்போரைத்தான் நாம் பார்க்கின்றோம்!

ஆகவே, சொல்லுவதோடு மட்டும் நில்லாமல் செய்தும் காட்ட வேண்டும்; அப்போதுதான் அந்த நன்னெறிகளை உணர்ந்தவர்கள் ஆவோம்!

மகாவீரர், ஆண்ட அரசர்களையும்--அண்டி உயிர் வாழ்ந்த ஆண்டிகளையும்--பெரும் பணக்காரர்களையும்--சிரமப்பட்டு பிழைத்த ஏழைகளையும்--'உயர்ந்தோர்' என்று சொல்லிக் கொண்டோரையும்-- 'தாழ்ந்தவர்' என்று கூறப்பட்டோரையும் தமக்குப் பின்னே வழிநடத்திய மாமனிதர் பின் செல்லவும் அவர் விட்டுச் சென்ற நல்ல காரியங்களை நாமும் கடைப்பிடித்து ஒழுகி, அதன் மூலம் நல்ல வாழ்க்கை வாழவும் வேண்டும்.

நான், நல்ல வாழ்க்கை என்று கூறியது, தாம் மட்டுமல்லாது பிறரும் உலகத்தில் மகிழ்ச்சியடையக் கூடிய அளவில் வாழலேண்டும் என்பதைத்தான் நல்வாழ்வு எனக் கருதி, மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று குறிப்பிடுகிறேன்.