8. புத்தரும் சுஜாதையும் சுஜாதையின் குறை பார்புகழ் கங்கை பாயும்நன் னாட்டில் ஆட்டின் மந்தையோடு ஆனிரை பலவும் ஆளும் அடிமையும் அளவிடற்கு அரிய நிதியும் பண்ணை நிலங்களு முடையோன், பக்தியில் சிறந்தோன் பரம தயாளன், தன்னிக ரில்லாத் தலைவன் ஒருவன் வாழ்ந்து வந்தனன். வாழ்ந்தவன் இறந்த திருப்பதி யதனைச் 'சேனானி' என்னும் அவன்குடிப் பெயரால் அழைத்தனர் எவரும் வள்ளல் இவற்கு வாய்த்த மனைவி- உண்மையும் அறிவும் உறையும் உளத்தினள்; எளிமையும் பொறுமையும் இரக்கமும் உடையவன்; எவர்க்கும் இன்னுரை இயம்பும் இயல்பினள்; பூத்த தாமரை பொலிவுறு முகத்தினள்; அங்கயற் கண்ணி, அழகின் செல்வி; மங்கையர் மாமணி, மாசறு மடந்தை— சுஜாதை என்னும் சுகுணசுந் தரியாம். செப்புதற்கு அரிய செல்வம் படைத்திவர் இருவரும் இல்லறம் இனிது நடாத்தி வாழும் நாளில், மைந்தன் இல்லாக் குறையொன்று அவருளம் குடிகொண் டிருந்தது. சுஜாதை நேர்ந்த கடன் அதனால், தேவி சுஜாதை தினந்தினந் தவறாது அரசு சுற்றினள், ஆலயம் தொழுதனள். ஆ-5 (5) (10) (15) (20)
பக்கம்:ஆசிய ஜோதி.pdf/66
Appearance