அன்பு வெள்ளம்/உள்ளத்தில் உறையும்
உள்ளத்தில் உறையும் கடவுள்
அன்பு வழி ஒன்றே சிறந்த வழி என்று நாம் அறிந்து கொண்டுள்ளோம். அவ் அன்பினை நாம் நம்புகிறோம்.
வன்கண்மை, கட்டாயப்படுத்தல், வற்புறுத்தல் போன்றவற்றால் ஆகாததை அன்பினால் பெற்றிடலாம்; தருக்கத்தால் - வல்லடிப் பேச்சினால் வென்றிட முடியாததை அன்பினால் வென்றிடலாம்; பணத்தால், செல்வாக்கால் பெற முடியாதவற்றை அன்பினால் பெற்றிடலாம்; முறை மன்றமாம் நீதிமன்றம் சென்றிடுவதைச் - சென்று வெற்றி பெறுவதை அன்பினால் வெற்றி கொள்ளலாம். ஆக, அன்பு என்பது, வன்கண்மை, வாதம், பணம், முறைமன்றம் ஆகியவற்றினும் நன்மை பயப்பதும் மேன்மையானதுமாக விளங்குவது என்று நாம் நம்பிடலாம். நம்ப வேண்டும்; நம்புகிறோம்.
நல்லதைத் தேடிக் கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் எது எது கடினம் என்று கருதுகிறார்களோ அவற்றைக் கற்கவும் கடைப்பிடிக்கவும் அன்பெனும் வழியே சிறந்ததாகும். அன்பு நெறியில் நட்க்கப் பயின்று நடந்துவருபவர் வாழ்க்கையில் எப்போதும் தவறி . இடறி வீழ்ந்து தோல்வியைக் காண்பதில்லை. நமக்குத் தொல்லை தரும் அவற்றால் வருத்தம் வரும் போதெல்லாம் கடவுளின் அன்பில் நாம் நம்பிக்கை கொள்வதில்லை. ஆனால் அப்படிப்பட்ட தாங்கொணாத தொல்லைகளும், துயரங்களும் அன்பினால் வந்துற்றவை அல்ல என்பதை இப்போது நாம் அறிகிறோம். ஆனால் அவை எங்கிருந்து வந்தன என்ற வினாவுக்கு ஒரே விடை. நம் நெஞ்ச அரியணையில் வீற்றிருக்கும் அன்பினை அப்புறப்படுத்தும் நமது பகைமை நோக்கத்தியிருந்தும் அதன் ஆக்கத்திலிருந்தும் தான்்.
நம் மனத்தின்கண் கடவுளை நீங்காது நிலைத்திருக்கச் செய்வது வேண்டும் என்பது ஏன்? நம் வாழ்வின் பல்வேறு துறைகளிலும் அன்பு காண வேண்டும் என்பதற்காகத் தான்்! நாம், நம்மில் நம் மாசில்லா மனத்தின் கண் இறைவன் இருக்கின்றார் என்னும் மனச் சான்றினை நாம் பெற்றோம் என்றால் பின்னர், நம்முள் இருக்கும் கடவுளையே நம்பிடலாம். நம்பி வாழ்ந்து - உயர்வு பெறலாம். அதனை, 1 யோவான் 4 : 4 ...... 'உலகத்தில் இருக்கின்றவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்' என்னும் உரையிலிருந்து அறிவோம்.
இயேசுவின் அன்பினைக் கொண்ட நெஞ்சம் கொண்ட நம்மில் ஒரு தூய - துணிவுடமை இருக்கும். இருக்கிறது - அது, இயேசுவின் அஞ்சுதலற்ற துணிவுடமை போன்ற துணையுடமை, நமக்கு என்ன தீங்கு வந்துற்றாலும் அதற்கு நாம் அஞ்சிடத் தேவையில்லை; அது யாதெனினும் அகற்றிட நம்மில் இருக்கும் இயேசு முன் நிற்பார்; முன் நின்று நம்மைத் தடுத்து ஆள்வார். அதோடு அவரது திறம், மன உரம், வலிமை ஆகியவை நம்மில் உள; நம்மில் இயேசுவும் அவரது அன்பும் இருப்பதால்!
அவர்தம் அன்பு, நம்மை, நம் வாழ்க்கைத் தோல்வி எனும் உலகிலிருந்து வெளிக் கொணர்ந்து, 'வாழ்வின் வெற்றி' எனும் பேருலகில் விடுகிறது.
நேர்மை என்னும் பரிசினை நாம் இயேசுவின் அன்பின் மூலம் பெற்றிருக்கிறோம்; இரக்கம் எனும் பெருஞ் செல்வத்தைப் பெற்றிருக்கிறோம். எனவே, அன்பு வாழ்க்கை அல்லது அன்பெனும் உலகில் நாம் மன்னர் போல் அரசோச்சலாம்.
ஊழியக்காரராக - அல்லது கொத்தடிடையாகவே நாம் இருக்க வேண்டும் என்று ஒருபோதும் தேவன் கருதியதில்லை. அன்பின் அடிமையாக இருக்கும் நம்மை வேலைக்காரர் அல்லது அடிமை ஊழியக்காரர். நிலையிலிருந்து தம் குமாரர் ஆகிய இயேசுவைப் போல, பிள்ளை எனும் உறவுப் பேருலகில் விளங்கிடச் செய்கிறார்.
அன்பு, நம்மை நம்மில் இருந்துவரும் தாழ்மை உணர்வு நிலையிலிருந்து விடுவித்து, இயேசு கிறித்துவுடன் ஒன்று பட்டிருக்கும் உணர்வினை அளிக்கிறது. திய உணர்வினால் நம்மில் உறைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை அழியப் பெற்று, அந்த நெஞ்சத்தின் அடித்தளத்தில் - அன்பின் பேருணர்வு பிள்ளைமைப் பேருணர்வு இடம் பெற்றிடச் செய்கிறது அன்பு.
அடிமை என்னும் உணர்வு கொண்ட ஒருவர் உள்ளத்தில், பிள்ளைமைப் பற்றார்வ உணர்வின் தன்மையினால் பெறும் மகிழ்ச்சியினை ஒருகாலும் பெற்றிட முடியாது.
இயேசுவின் அன்பைப் பெற்ற நாம், அன்பு வாழ்வும் அதனால் இயேசுவில் ஒன்றியிருப்பதால் நாம் இப்போது ஆண்டைகள், வாழ்க்கையில் வென்று மேம்படும் வெற்றி வீரர்கள்; மேம்பட்டு விஞ்சி நிற்பார்கள்; வாழ்பவர்கள் ஆவோம். இயேசுவின் திறம், இயேசுவின் மெய்யறிவு, இயேசுவின் வலிமை, இயேசுவின் அன்பு, நம்மில் நிறைந்துள்ளது.
இறையருளினால், நாம் உரிமைமிகு மக்கள். நாம் தேவனைப் பின்பற்றுகிறோம். அதனால் தேவன் நம்மில் ஒத்திசைந்து விளங்கு கிறார் என்பதை மனத்தில் ஆழமாகப் பதிப்போம்.
அன்புநெறி ஒன்றே அறநெறி வாழ்வுக்கே
இன்பநெறி ஈதொன்று தான்.