உள்ளடக்கத்துக்குச் செல்

இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/இறைமொழி வேட்கை

விக்கிமூலம் இலிருந்து
இறைமொழி வேட்கை

ன்னை ஏற்றுக் கொள்வாய் இறைவா, சற்று நேரத்திற்காகவாவது.

நீ இல்லாமல் அனாதையாய் கழிந்துவிட்ட அந்த நாள்கள் மறக்கப்படட்டும்.

இந்தச் சிறு கணத்தை உனது ஒளியினால் அரவணைத்து உனது மடியிற் இறுத்திப் பரப்பிடுவாயாக.

என்னைத் தன்பால் கவர்ந்திழுத்த ஆனால் எங்குமே இட்டுச் செல்லாத குரல்களைத் தேடி நான் அலைந்து திரிந்ததுண்டு.

இனி அமைதியாயிருந்து பேசாமல் உன் ஆன்மாவில் உறையும் உன் மொழிகளைக் கேட்பேனாகுக.

一எ

பாழ்நிலைத்து பறவையாகிற என் நெஞ்சம், உன் கண்களில்தன் விண்ணைக் காண்கிறது.

காலை நேரத்தின் தொட்டில் அவை: விண்மீன்களின் ஆட்சிப் பரப்பும் அவை.

அவற்றின் ஆழத்தில் எனது பாடல்கள் தொலைந்து போயின.

விண்ணின் மேல் அதன் ஆழ்ந்த தன்மையில் நான் உயரே பறக்கட்டும்.

முகில்களைக் கீறிக் கதிரவன் ஒளியில் என் இறக்கைகளைப் பரப்பட்டும்.

-தோ

யர்ந்தெழும்பும் அலைகளுக்கேற்பத்தான் கடல் இசை பாடுகிறதா? தாழ்ந்து தணியும் அலைகளுடன் அந்த இசை ஒன்றுபடுவதில்லையா?

-க.கொ

லர்கள் மலர்வதற்கான விடுதலையைப் பெற்றதற்காகக் கானகத்தின் வேண்டுதலையைக் கேட்டிடுவாய்.

-மின்

புலி வேட்கையால் தவிப்பவர்களுக்குச் சிறிதளவே போதுமென்றால் கூட எனது மகிழ்ச்சிப் பெருக்கில் என்னிடமுள்ள நீரை எல்லாம் நான் வாரி வழங்குகிறேன்," என்று இசையருவி பொழிகிறது.

-ப.ப

.

மைதியில்லாத என் மனத்தைக் காரணம் காண முடியாத மகிழ்ச்சியால் சூழ்ந்து கொண்டது இலையுதிர் காலம்.

-நினை

டைப்புலக வாழ்க்கையாகிற தன் தொழிலின் தொடக்கத்தில் இன்று மாந்தன் இருக்கிறான், தன்னிடமிருக்கும் நிறைசெல்வத்திலிருந்து அவன் வழங்கவேண்டும்.

- ஆ

ல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கில் இந்த மலர்களை மேலே உயர்த்தி விளையாடிடும் நீரூற்று எங்கே உள்ளது?

-ப.ப.

தனது தனிப்பட்டக் கருத்தை அனைவரும் ஏற்று மகிழ்ச்சியடையச் செய்கிற பாவலனே உண்மைப் பாவலன்.

-சா

இரவே, பகலாகிற வெறுமைக் கிண்ணியை நான் உன்னிடம் கொணர்கிறேன், புதியதொரு காலை விழாவிற்கு அடிகோலும் வகையில் எனது இருட்டினால் அதைத் தூய்மை செய்திடுவாய்.

-மின்

எனது நெஞ்சத்தின் தனிமையில் பனியையும் மழையையும் முகத்திரையாக அணிந்துள்ள கைம் பெண்ணின் பெருமூச்சை உணர்கிறேன்.

-ப.ப.

உன் வாழ்வைக் கொண்டு அன்பு விளக்கை ஏற்றிச் செல்.

-மின்

மலையிலுள்ள தேவதாரு மரம் தன் இலைகளின் சலசலப்பின் ஓசையை அமைதி வழிப்பாட்டுப் பாடல்களாக மாற்ற ஈடுபடும் போராட்டங்களின் நிலையை இசைக்கிறது.

-மின்

நேயத்தைப் போன்று, மூடுபனியும் குன்றுகளுடைய நெஞ்சங்களை வருடுகிறது; அழகின் சிரிப்புகளை வெளிக் கொணர்கிறது.

- ப.ப.

வாழ்வது ஒரு பாவமானால், அதை மெய்ப்படுத்துவதற்கு அது காத்திருப்பதில்லை.

- சா

உன் நேயத்தின் பருதி ஒளி எண் எண்ணங்களின் முகடுகளை முத்தமிடட்டும்.

-எ

மாந்தனின் நிலையான வாழ்க்கையில் நான் வாழ விரும்புகிறேன்.

-நினை

வாழ்க்கையின் முறையைக் கண்டறிந்து, அதன் வழிச் செல்வதன் மூலம் நாம் சிறப்புற முடியும்.

- சா

வாழ்க்கையின் நிழல் படிந்த ஆழத்தில் சொற்களால்

சொல்லமுடியாத நினைவுகளில் தனிமைக் கூடுகள் குடி கொண்டுள்ளன.

-மின்

பாவலனின் காற்று அவனது குரலைத் தேடிக் கடலின் மீதும், கானகத்தின் மேலேயும் வீசிச் செல்கிறது.

-ப.ப

தனது இசையை யாழ் எடுத்துச் செல்வதைப்போல், எனது வாழ்க்கையில் உனது காதலை நான் எடுத்துச் செல்வேன்.

-எ

தனது அமைதியான புகழ்பாடும் பாடலைப் புல்லி இதழ்களாகப் பெயரிடப்படாத ஒளியிடையே வாழ்க்கை அனுப்புகிறது.

-மின்

கேட்டுக் கொண்டிருக்கும் பைன் மரங்களுக்கு இடையே அமுக்கப்பட்ட கடலின் இரைச்சலைப்போல், என் நண்பனே, என் நெஞ்சத்தில் உன் குரல் அலைந்து அல்லாடுகிறது.

-ப.ப

பிறப்பையும் இறப்பையும் பற்றி எண்ணிப்பார். அவற்றுக்கிடையே பிரிவொன்றுமில்லை. கைகளில் வலது, இடது இரண்டும் ஒன்று தானே.

-க.பா

உன் கையை நான் இறுகப் பிடித்துக் கொள்கிறேன், எனது தனிமையில் உனது ஊடுணர்வு துணை நிற்கிறது.

-எ

தளைகள் யாவற்றையும் அன்பு உதறிடும்போது, வாய்மையின் நிலையை அது அடைகிறது.

-க.பா

எளியவர்களாக நாம் இருக்கும்பொழுது, உலக நடை முறைகளுக்கு நேரெதிராக நாம் இருக்கும்பொழுது, உலக ஆற்றல் நம்மை அமுக்கவே செய்யும்; நாம் புகழ் பெறும்போது, அனைவருடனும் நேர்நிகராக நிற்கும் பொழுது, அதுவே நமக்குத் துணைபுரியும்.

-சா

வெளியேற வேண்டியதற்குக் கதவைத் திறந்துவை. ஏனெனில் தடைகளைச் சந்திக்க நேரிடும்போது, அது ஒன்றும் பெரிதாகத் தெரிவதில்லை.

-மின்

வேனிற்கால மலர்களைப்போல வாழ்க்கை அழகாக இருக்கட்டும், இறப்பு இலையுதிர் நாள் இலைகளாக இருக்கட்டும்,

-ப.ப

முழுமை பெறும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன துன்பத்தில் மகிழ்ச்சி என்றுமே விரிவடைவதும் அதில்தான் உள்ளது.

-சா


எனது உறக்கமாகிற இருட்டில், உனது அன்பு விண்மீன்களாக ஒளிவீசட்டும்.

-சா

முதன் முதல் பூத்த மலர் இன்று காலை எனக்கு அன்பளிப்பாக வந்து சேர்ந்தது.

-எ

உரிமையுடன் இருக்கிற மாந்தனுடைய மனவுறுதி விடுதலையாகவுள்ள மற்ற மாந்த உறுதிகளுடன் இணக்கம் காண முயல வேண்டும். உள்ளுயிர் வாழ்வின் பொருளே இதில் தான் அடங்கியுள்ளது.

-ஆ

உனது விரலின் தொடுகை என் வாழ்க்கையின் நரம்புகளைக் கிளர்த்திடச் செய்யட்டும்; வெளிப்படும் இன்னிசை உன்னுடையதாகவும் என்னுடையதாகவும் இருக்கட்டும்.

-மின்

நமது உண்மையான இயல்பை நாம் அடையும் போது, நாம் விடுதலை பெறுகிறோம்.

-சா

எனது வாழ்க்கையில் கனிபோல் வட்ட வடிவமைக்கப் பட்ட உன் உலகம் மகிழ்ச்சியாலும், துயரத்தாலும் பக்குவமடைந்துள்ளது. மூல நிலத்தின் இருட்டில் விழுந்து மற்றொரு படைப்புக்காகக் காத்திருக்கிறது.

-மின்

விடுதலையில் நமது மன உறுதி அடங்கியுள்ள காரணத்தினால் நமது உள்ளத்தின் மகிழ்ச்சியும் விடுதலையில் தான் அடங்கியிருக்கிறது.

-ஆ

மருட்கையான உலகிலிருந்து ஒரு செய்தியுடன் அது வந்தது. துயரம் பெருமூச்சுடன் படிஞாயிற்றின் மேல் விளிம்பில் அமர்ந்து கொள்கிறது.

- க.வே

புடவியின் முழுச் சுமையும் கூட எனது தனித் தன்மையை நசுக்கி விட முடியாது.

-சா

முறைமைகளால் கட்டுப்பட்டபொருள் தன்னுடன் காணும் இணக்கமே அழகு. உரிமையுடன் செயல்படும் மனங்களின் இணக்கமே அன்பு.

-ஆ

பகலில் தென்படாது ஆனால் உணரப்படுபவனுக் காகவே இந்தத் தேடுதல்.

-ப.ப

மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், உலகின் மனப்போக்கின் ஆளுமைக்குத் தனிப்பட்ட நமது தன்மை தலை வணங்கவேண்டும்.

-சா

அமைதியின் குரல் என் சொற்களைத் தொடும் போது, நான் அவனைத் தெரிந்து கொள்கிறேன்; அப்படியே என்னையும் அறிந்து கொள்கிறேன்.

-மின்

நமது இயல்பை அழித்து விடுவதன்று சமயத்தின் நோக்கம்; மாறாக அதை வளர்ப்பதே அதன் நோக்கம். -சா

எனது குறைகளை நன்கு தெரிந்திருந்தும் என்னை விரும்புபவர்களுக்கே எனது கடைசி வணக்கங்கள். -மின்

மற்றவர்களின் கைகளிலிருந்து நான் ஏதொன்றையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் இறைவனிடமிருந்து அனைத்தையும் ஏற்று கொள்வேன். -கோ

புல்லின் துணைகொண்டு யாவற்றையும் உவந்தேற்க இந்த மாநிலம் தன்னை அணியமாகக் கொள்கிறது. -ப.ப

மனிதனிடம் நேய உணர்வு இருக்கும்போது, எவ்வாறு பழுத்த பழத்தை மற்றவர்களுக்கு அளிக்கும் போது மரம் மகிழ்ச்சியுறுகிறதோ, அதே போன்று கொடுப்பது என்பது மனிதனுக்கு மகிழ்ச்சியளிக்கும் செயலாகிறது. -சா

நேயத்தின் பரிசு கொடுத்து விடக் கூடிய ஒன்றன்று. ஏற்றுக் கொள்ளப்படும் வரை அது காத்துக் கிடக்க வேண்டும்.

-மின்

செயல்படாமலிருப்பதற்கான உரிமையன்று நமது உண்மையான உரிமை செயல்படுவதற்கான உரிமையை அது குறிப்பிடுகிறது. -சா

நேயத்தில்தான் நான் வாழ்ந்துள்ளேன்,வெறும் காலத்திலன்று. -மின்

வாய்மையற்றவை யாவற்றினின்றும் என்னைக் காப்பாற்றிவிடு. வாய்மை மட்டுமே என் வாழ்க்கையில் தன் ஒளியைச் சிந்தட்டும். -கோ

என் வீட்டினெதிரே விரிந்து பரந்துள்ள அரச வீதி என் நெஞ்சத்தில் ஓர் உள்ளார்வத்தைத் தூண்டுகிறது. -எ

முழுமையாக உன்னை இறைவனிடம் ஒப்படைத்து விடு. அவனை உனது ஒரே துணையாக வைத்துக் கொள். -கோ

கடுமையான வரைமுறைகளுக்கு உட்பட்டே அழகான பாடல் உருப் பெறுகிறது. ஆயினும் அவை யாவற்றையும் மீறவே செய்கின்றது.

-சா

என்னைப் பொறுத்தவரை, இறைவன் ஒருவரே வழி பாட்டுக்குரியவர்; வேறு எவருமில்லை. -க.பா

என் உள்ளுயிரின் துயரமே மணமகளின் முகத்திரை இரவில் அகற்றப்படுவதற்காக அது காத்திருக்கிறது. -ப.ப

காலையில் கண்விழிப்பது போன்றும், இலைகளிலிருந்து பனித்துளி வடிவதைப் போன்றும், எனது பாடல் எளிமையாக இருக்கட்டும். -எ

நல்லவற்றைத் தேர்ந்தெடுக்க உன் வலிமை அத்தனையையும் ஒன்று திரட்டி மகிழ்ச்சியுடன் முன்னேறு. -கோ

பிறப்பு, வாழ்வு, இறப்பு ஆகிய நீரோடையின் மேல் மிதந்து கொண்டும் மறந்து கொண்டும் இழுக்கப்பட்டு வருபவையுமான மற்ற காலகட்டங்களை எண்ணிப்பார்க்கிறேன், மண்ணிலிருந்து மறைந்து போகும் உரிமையை உணர்ந்திருக்கிறேன். -ப.ப

உலகத்தின் உள்ளமான கடைப் பகுதியில் இறப்பற்று, இளமை நிமிர்ந்து நிற்கிறது. இறப்பும், வீழ்ச்சியும் அதன் (இளமை) முகத்தில் தர்ற்காலிகமான நிழல்களைப் பரப்பிவிட்டு மேலே செல்கின்றன.

-சா

மலரைப் போன்று, தன் செழுமையிலிருந்து ஒன்றிரண்டு இதழ்களை உதிர்த்து விட்டுத் தனது இழப்புகளைப் பெரிதாக எண்ணாமலிருக்கும் மலரைப் போன்று இளமைப் பகுதியில் நான் இருந்து வந்தேன். -க.கெப

நமது உலகின் கிழிந்து போன அதே பழைய நாளே மீண்டும் மீண்டும் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் பிறப்பெடுக்கிறது. -சா

கோடை விழா புதிது புதிதாக அரும்பும் மலர்களுக்கு மட்டும் தானா; வாடி வதங்கிக் களையிழந்திருக்கும் மலர்களுக்கு இல்லையா? -க.கொ

வானில் ஏதோவொரு மூலையில் மிக அடக்கமாக நின்றிருக்கிறது முகில். காலைப் பொழுது ஒளி வழங்கி மணிமகுடம் சூட்டுகிறது. -ப.ப

ஆளுமையின் சிறப்பை நாம் அடையவேண்டுமென்றால் அண்டத்தின் அடி ஆழத்தில் நாம் வேர் பிடிக்க வேண்டும். -சா

இறைவனின் அருகில் அமர்ந்திருக்கும் சீரும் சிறப்பும் பெற்ற பேறு பெற்றவர் வெகு சிலரே. ஆனால் என் போன்ற அறிவிலிகளையும் தன் கைகளினால் வாரியெடுத்து அரவணைத்துத் தன் அடியார்களாகவே வைத்திருக்கிறான் அவன். -க.கொ

உன்னிடம் வைத்துக் கொள்வதற்காக மலர் பறிப்பதற்குக் காத்திராதே. மேலே நடந்து செல். ஏனெனில் நீ செல்லும் வழியெல்லாம் மலர்கள் மேலும் மேலும் சிறகு விரித்துச் செல்லும். -ப.ப

பொருள் புரியாதிருந்த காலத்தில், உனது சைகையின் உட்பொருளைத் தினையளவு தும்பும் தூசியும் கூட மறைத்து விட்டிருந்தது.

இன்று நான் நுண்ணறிவினன் ஆகிவிட்டேன். ஆகவே முன்னர் மறைக்கப்பட்டிருந்ததெல்லாம் எனக்குப் புலப்படுகிறது. -க.கொ

தூரத்திலிருக்கும் வேனிற்கால இசை தனது முந்தைய கூட்டைத் தேடிக் கொண்டு இலையுதிர் காலத்தைச் சுற்றிச் சிறகடித்துப் பறக்கிறது. -ப.ப

துயரத்தின் இருண்மைக்குப்பின், இன்று அதிகாலைப் பொழுது விடிகிறது.

-கோ

ழப்பின் மூலம் நாம் நமது என்பதைப் பெறுகிறோம். நம்மை நாம் அளிப்பதினாலேயே உயர்கிறோம். -சா

என் நெஞ்சமே, உன் பயணத்தைத் தொடர்வாய்; இருக்க வேண்டியவை நம்முடனேயே இருக்கட்டும்.

ஏனெனில், காலை வானில் உனது பெயர் பொறிக்கப்பட்டுவிட்டது. எவருக்கும் காத்திராதே. -க.கொ

ன்மிக உலகை உருவாக்குவதில், நாம் இறைவனின் பங்குதாரர்கள். -ஆ

எல்லை, எல்லைக்கப்பால், சட்டம், விடுதலையாவற்றையும் தன்னுள்ளில் இணைத்து வைத்துள்ளது அழகு. -சா

ரவையும் பனித்துளியையும் நெருங்குவதுதான் அரும்பின் ஆசை. ஆனால் முழுமையாக மலர்ந்துள்ள மலர் அடைய விரும்புவது பகலின் விடுதலையே.

ன் நெஞ்சமே, உறையிலிருந்து வெளி வந்துவிடு, மேலே முன்னேறிச் செல்! -க.கொ


பழைய மரத்தைச் சுற்றிப் பாசி படர்வதைப் போல் பெயர் தெரியாத நாள்களின் தொடுகை என் நெஞ்சத்துடன் ஒட்டி உற்வாடுகிறது.

-ப.ப

நமது வாழ்வு கரைகளோடு மோதும் ஆறு போன்றது. கரைகளுக்கெதிராகப் போரிடும் நோக்கம்தான் ஒரு கட்டுக்குள் சிறைப்பட்டுள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அன்று; கடலைச் சேர்ந்தடைவதற்கான பாதை என்றுமே திறந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு கணமும் உணர்ந்தறிவதற்காகவே. –சா

என்றும் நிலைத்திருக்கும் இளமையைத் தேடிக் செல்கிறேன் நான் - என் வாழ்க்கையுடன் ஒத்துவராத, என் சிரிப்பைப் போன்று அத்தனை எளிதாக இல்லாத ஒவ்வொன்றையும் தூக்கியெறிந்துவிடுகிறேன். -க.கொ

நமது ஆன்மிகச் செயற்பாட்டில் பெற்ற பயன், பகிர்ந்தளித்த பக்குவம் எல்லாமே ஒன்றுதான். -ஆ

தான் என்கிற நமது நிலை அடக்கத்திலும் அன்பிலும் தலை வணங்கி நிற்க வேண்டும். பெரியதும் சிறியதும் இடத்தில் நிலை பெற வேண்டும். -சா

விண்ணின் ஆசை அத்தனையையும் உள்ளடக்கியது எனது சிறகுகள்.

-க.கொ

நாம் இணைந்த அதிகாலை விடியல் நம் நெஞ்சங்களைத் தாண்டி அமைதியில் வழிந்தோடுகிறது. -ஈ

ன் உடன் பயணியே, நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் உன்னை ஒவ்வொரு கணமும் கூடுவதற்கே. -க.கொ

ன் தாயின் பல்வேறு செயல்கள் பற்றியெல்லாம் குழந்தைக்குத் தெரியாது. அதற்குத் தெரிந்ததெல்லாம் அவள் தன் தாய் என்பது ஒன்றே. -ஆ

னது உள்ளத்தில், உன் அன்புக்குரியள் என்ற இடம் எனக்குண்டு; உன் உலகத்திலோ, உனது பட்டத்தரசி என்ற நிலைப்பாடு உண்டு. -ஈ

வெளிப் பார்வைக்கு, இயற்கை அமைதியற்றதாகவும், எப்பொழுதும் துடிப்புள்ளதாகவும் தோற்ற மளிக்கிறது. உள்முக நோக்கில் அது அமைதியாகவே இருக்கிறது. -ஈ