உள்ளடக்கத்துக்குச் செல்

இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/அளவிலா ஆசை

விக்கிமூலம் இலிருந்து
அளவிலா ஆசை

லைகள் சலசலக்கும் உன் கிளைகளில் புகுந்து விளையாடும் காற்றாகிவிட வேண்டுமென்றும், பொழுது சாயச் சாய நீண்டு வந்து நீரில் படிய உனது நிழலாகிவிட வேண்டு மென்றும், உன்னுடைய உச்சாணிக் கிளையிலே வீற்றிருக்க ஒரு புள்ளினமாகிவிட வேண்டுமென்றும் நிழல்களுக்கிடையிலும் காணல்களுக்கிடையேயும் அந்த வாத்துகளைப் போல மிதந்து வர வேண்டுமென்றும் அவன் ஆசைப்பட்டதை யாராலும் அளவிட முடியாதுதான்!

ன்னைப் படைத்த பேரொளியின் துன்புறுத்தும் பெருக்கத்தை யாரால் கற்பனை செய்ய முடியும்?

-நா

வ்வொரு நாளும் என் நெஞ்சத்திலிருந்து பருதி ஒளியை வாங்கி விடுகிறாய். என் வாழ்வாகிற உருவத்தில் உன் காதல் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறாய்.

-க.கொ

பொருளை நம்ப இயலாவிட்டாலும் கூட இசையில் உண்மை இருந்து விட்டால் மனநிறைவு பெற்றிடுவாய்.

- நா

றவைகளுக்கு நீ பாடல்களை அளித்தாய், பறவைகளும் பாடல்களை உனக்குத் திரும்ப அளித்தன.

-க.கொ

வாழ்வு என்பது இடைவிடாத படைப்பு. எல்லை இல்லாததில் அது தன்னை மீறி வளர்ச்சியடையும் போது அதில் உண்மை தெரிகிறது.

-ஆ

ன் அன்பே, உன்னை என் கண்களில் மறைத்து வைத்திருப்பேன்.

-நா

நிறைவு பெறுதல் என்கிற ஞாயிறு உதயமாகி விட்டான். விண்மீன்கள் அதன் ஒளியில் தங்கள் ஒளி மங்கி நிற்கின்றன - உயிரளிக்கும் அறிவை நான் முற்றிலுமாக அடைந்து விட்டேன்.

-நா

காற்றை நீ மெல் இயக்கமாகச் செய்து விட்டாய். உன் பணியில் ஒரு கூட்டம், நானே என் கைகளைச் சுமையற்ற தாக்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே, நீ என் கைகளில் சுமை ஏற்றிவிட்டாய்.

-க.கொ

னது பணியாளனாகிய நான் துணிவும் செருக்கும் கொண்டு தலையை நிமிர்த்தி நடக்க வேண்டும்.

க.கொ

ன் அரசியே, எனது பழத் தோட்டத்திற்குள் பெருமையுடன் புகுந்து, நிழலில் அமர்ந்து, கம்பிலிருந்து பழுத்த பழங்களைப் பறித்துக் கொள்.

வெளிச்சத் திவலைகளினால் நிழல்களை நிரப்பி நீயே நிலத்தைப் படைத்தாய்.

ங்குச் சற்று நின்று கொண்டாய், உனக்கான விண்ணைப் படைத்தளிப்தற்காக என்னை வெறுங்கை யனாக நிறுத்திச் சென்று விட்டாய்.

-க.கொ

மாந்தனின் உண்மை உலகைப் படைத்தல் - உண்மை, அழகு இவற்றினாலான, வாழும் உலகம் அது - கலையின் பணி.

ண்பா, நீ இப்பொழுது தப்பிச் செல்ல முடியாது, ஏனெனில் உனது கமுக்கம் எனதும் தான்.

-நா

நான் வந்தேன். உன் நெஞ்சம் விம்மியது. வலியும், மகிழ்ச்சியும் ஒருசேர உன்னிடம் வந்தேன்.

நீ என்னைத் தொட்டாய்; காதலில் உள்ளதிர்வுற்றாய்.

-க.கொ

அதோ கடலையைக் கொறிக்கும் அணிலாக இருந்தால் உரிமையாக உலாவுவேன். அந்தோ, அந்தக் குன்றைத் தாண்டிச் செல்ல என் மனம் துடிக்கிறதே! அந்தக் குன்று கையை உயர்த்தி வானை அழைப்பது போலிருக்கின்றதே! அந்த ஆற்றைத் தாண்டி இயற்கை உலகைக் காணமாட்டேனா?

அ அ

ன் கைகளை நிரப்பிப் பிரிந்து செல்லும் ஒளிக் கீற்றுதான் உன் உலகம். ஆனால் உனது துறக்கமோ எனது கமுக்க நெஞ்சத்தில் உள்ளது. அது மெதுவாக நாணம் கொள்ளும் காதலின் அரும்புகளாக விரிகிறது.

-க.கொ

திடீரென்று என் குரல் உன் நெஞ்சத்தைத் துடிக்கச் செய்து அங்க அசைவுகளை ஏற்படுத்தும், இதை நான் ஒரு பொழுதும் கண்டதில்லையோ?

-நா

ன் விருப்பங்களை நிறைவேற்றி வைத்துக் கொள். உன் கட்டளையை ஏற்றி உன் அரசவையில் விருப்பம் போல் நான் நடமாடவேண்டும்.

-க.கொ

காதல் தனது துயரமான அமைதியின் மேல் சாயும் பொழுது, இருட்டு ஆற்றங்கரையின் மேல் சாய்கிறது. இந் நிலையில் விண்மீன் கூட்டத்திலிருந்து பறித்து வந்து பாடல்களை என்னருகில் அமர்ந்து பாடச் சொன்னது எது?

-நா

றப்புக் காலத்தில் தனது கட்டுகளை மாந்தன் உடைத்தெறியும் அதே சமயம் கட்டுகளுக்கு அடங்காது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகிறதில்லையா.

க.கொ

நான் குழந்தையாயிருந்த காலம் தொட்டு நீ என் நெஞ்சத்தில் வாழ்ந்து வருகிறாய்.

-வ. ப

ரவினூடே உன் கையை நீட்டு, அதை நான் பற்றிக் கொள்ள, நிரப்ப, வைத்துக் கொள்ள ஒப்புவாய், நீண்டு கொண்டேபோகும் என் தனிமையில் அதன் தொடுகையை நான் உணரவேண்டும்.

-க.கொ

றப்பது உறுதி என்ற நிலையிலும் தான் இறப்பற்றவன் என்ற எண்ணத்தை மாந்தனுள் எழுப்புவது எது?

புரிதல் என்ற தொடர்பு நிலை அரை குறையானது, ஆனால் காதல் என்கிற தொடர்பு முழுமையானது.

சா

ல்லோருடனும் நீ பேசி முடித்த பின்னர் தான் எனது முறை வருகிறது. உனது கடைசி பணியாளன் செய்யவேண்டியது என்ன உள்ளது என்று அறிந்து கொள்ளவே உன்னிடம் நான் வருகிறேன். -

-தோ

ம் உள்ளுயிர்களை நாம் மாய்த்துவிடக் கூடாது. நம்மிடம் நிலைத்து நிற்பது எதுவோ அதை வெளிப் படுத்தவே நமக்கு வாழ்வு இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

-ஆ

உங்களுடைய இளைய அலைபாயும் உள்ளங்கள் ஒன்றுசேர்கின்றனவா என்று நான் கண்காணித்து வருகிறேன். ஆர்வம் பொங்கும் இரண்டு இணை விழிகள் தங்கள் அமைதியை உடைக்கவும் தங்களுக்காகப் பேசவும் இசையை இரந்து கொண்டு நிற்கின்றன.

-தோ

இந்த உலகம் முழுவதும், எல்லையில்லாத வெட்டவெளியும் குழந்தைக்காக, புதிய வாழ்வுக்காகவே படைக்கப்பட்டவை.

-நா

உலக இசை மேடைக்குத் தன் குரலையும் பங்களிப்பாய்த் தரும் போதுதான் படைப்பாளி என்ற அளவில் நமது கட்டற்ற உரிமையும் உயர் மகிழ்ச்சி காண்கிறது.

உனது ஆடி ஓசைகளின் தாள இசையை நானறிவேன், எனது நெஞ்சத்துள் அவை துடித்துக் கொண்டிருக்கின்றன.

-தோ

தாயின் கைகளில் சிரித்துக் கொண்டிருந்த குழந்தை வெட்ட வெளிச்சத்திற்கு ஓடி வந்து, கொண்டிருக்கிறது. இதற்காகத்தான் வருகை நாள் என்று அவர்கள் சொன்னார்களோ?

ஆமாம் இதனால்தான் காற்றில் இசை இருந்ததென்றும், வானத்தில் வெளிச்சம் இருந்ததென்றும் அவர்கள் கூறினார்கள். -நா

முதல் அன்பில் நான் திளைத்துக் கொண்டிருந்த பொழுது, புதிய வியப்புடன் ஒருநாள் நீ என் வாழ்வில் வந்தாய்.

-கா. ப

எதன்மேல் என் காதலி நடக்கிறாளோ, அந்த மண்ணுக்குள் என் உடல் மறைந்து விடுவதாக நான் உணர்கிறேன்.

-நா

அவனுக்காகக் காத்திருந்து அவனுடைய காலடி ஓசையை நான் கேட்கும் பொழுது, மரங்களில் இலைகள் சலசலப்பதில்லை. ஆறுகளில் தண்ணீர் அமைதியுற்று நிற்கிறது. என் நெஞ்சம் மட்டுமே கடுமையாகத் துடிக்கிறது. அதை அமைதிப்படுத்த எனக்குத் தெரியவில்லை.

தோ

என் நெஞ்சம் வெளிச்சத்தில் உருகி கண்ணாடியில் ஒன்றிவிடுகிறது. அதில் அவன் தன் முகம் பார்க்கிறான்.

-நா

விடியலின் அமைதியில் கோயிலுக்கு இட்டுச் செல்லும் தனித்த சாலை அருகில் தலை தாழ்த்தி மர நிழலில் கீழ் ஓரமாக நான் நிற்கிறேன்.

கா.ப

என்னருமைக் காதலியே, உன்னை என் கண்களுக்குள் மறைத்திருப்பேன், என் மகிழ்ச்சியில் வைரம் போன்று உன்னை இழையிட்டிருப்பேன், என் மார்பின் மேல் அதைத் தவழ விட்டிருப்பேன்.

-நா

என் காதலி வருகையில், என்னருகில் அமர்கையில் இருட்டு மேலும் கறுத்து விடுகிறது, காற்று விளக்கை அணைத்துவிடுகிறது, விண்மீன்கள் மேல் கொண்டல்கள் திரையிடுகின்றன. என் மார்பின் மேல் தவழும் மதாணி ஒளி வீசுகிறது, வெளிச்சம் அளிக்கிறது, அதை எவ்வாறு மறைத்து வைப்பது என்பது எனக்குத் தெரியவில்லை.

-தோ

என்னிடம் நீ குறைகள் காணும் பொழுது நான் ஒரு பெண் என்பதை நினைவில் வைத்துக் கொள். நினைந்து நினைந்து பார்க்கும் பொழுது ஒன்று தெளிவாய் தெரிகிறது. இந்த உலகில் எனக்கென்று எஞ்சி நிற்பது உனது அன்பு ஒன்றே, உன்னை விட்டு நான் ஒரு கணம் பிரிந்து விட்டால், நான் இறந்து விடுவேன்.

-நா

பறவைகள் தங்கள் கூட்டை விட்டுக் கிளம்பிவிடுவதைப் போல, உன் எண்ணங்கள் உன் கண்களிலிருந்து புறப்பட்டுவிடுகின்றன.

-தோ

பொழுது விடியப் போகிறது என்று இரவு உணர்வதைப் போல், நீ வரப்போகிறாய் என்பதை என் நெஞ்சம் உணர்கிறது.

-நா

கனவுகள் தோன்றாத உறக்கம் போன்று என் ஏரி இருண்டிருக்கிறது. அடி ஆழத்தில் இரவும் பகலும் ஒன்றே: அமைதியே பாடல்களாகின்றன. -தோ குழந்தைகளைஅடைத்துப் போடாமல், மகிழ்ச்சியாக ஒடியாடவிட்டாலே கட்டில்லாமல் உடலும் உள்ளமும் செழித்து வளரும்.

-நினை

அன்பே உலகம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். காரணம் அன்பு தான் உலகைத் தோற்றுவிக்கிறது, காக்கிறது, அதை அதன் மார்பகத்திற்கே இட்டுச்செல்கிறது.

சா

கடல் கொந்தளிக்கும் போது அலைகள் எழுவதைப் போல், என் எண்ணங்கள் கிளர்க்கும் பொழுது, நீ எழும்புகிறாய். பாடல்கள் பீறிட்டு எழும்போது என் நெஞ்சம் அவற்றினடியில் முழுகிப்போய்விடுகிறது.

-நா

நம் உள்ளத்திற்கு உவகை ஊட்டும் பொழுதுதான் எந்தவொரு பொருளும் நமக்கு முழுதும் உரித்தாகிறது.

சா

தான் முளைத்தெழும் பரந்த உலகிற்குத் தகுதியாகிறது புல்லின் இதழ்.

பப

அந்த ஒருவனைக் கண்டு பிடிப்பது என்பது எல்லாவற்றையும் அடைந்திருப்பதேயாகும். அதில் தான் நமது அறிதியும், உயர்ந்ததுமான உரிமை உள்ளது.

சா

என் பாடல்கள் தேனீக்களைப் போன்றவை. உன் நினைவை ஏதோவொரு நினைவு - நறுமணம் வீசும் காற்றினூடே, உனது வெட்கத்தைச் சுற்றி, மறைந்திருக்கும் ஒரு புதிர்ச் செல்வத்தைக் காணத் தொடர்கிறது.

-நா

உனது மறைந்த மெய்தொடு உணர்வு பொங்கி வழியும் என் நெஞ்சத்தை எனது உடலின் ஆழத்திற்குக் கொண்டு செல்லட்டும்.

-நா

உனக்கும் எனக்குமிடையே உள்ள காதல் ஒரு பாடல் போல் எளிமையானது.

-தோ


அலையில் அலைக்கழிக்கப்படும் பலரில் ஒருவனாக நான் இருந்த போதிலும் உனது அன்பினால் என்னை உயர்ந்தவனாக்கிவிட்டாய் நீ.

-நா


எனக்காக நீ கட்டிய மல்லிகை மாலை புகழுரை போன்று என்னைச் சிலிர்க்க வைக்கிறது.

-தோ

நம்மிடம் தன்னைக் கொடுப்பதோடு அவன் நிறைவடைந்து விடுவதில்லை. நமக்கு நாமே அளித்துக் கொள்ளும் ஆற்றலைப் போன்று, தானும் நமக்கு ஆற்றலை அளிக்கிறான்.

-சா

எல்லையற்ற தன் நுழைவாயிலைத் தட்டுவதற்கான உரமளிக்கும் வேண்டுதலை துன்பம் மாந்தனுக்கு அளித்திருக்கிறது. -ஆ

நாளை இசைக்கப்பட வேண்டிய பாடல்கள் இன்று, அரும்புகளாக உள்ளன. அவற்றின் வழி நீ நடந்து செல்வது தெரிந்தால் பக்குவப்படாத அவற்றின் நெஞ்சங்கள் இன்றே நொறுங்கிவிடும்.

-நா

தன்னையே அளித்திடும் இறைவனின் உயிரோட்டம் கட்டற்றுச் செல்ல முனைந்திடும் மாந்தனின் வாழ்க்கையைத் தொட்டுச் செல்கிறது.

- ஆ

என் நெஞ்சம் உன் நெஞ்சத்தைத் தொடட்டும்; உன் அமைதியிலிருந்து நோக்காட்டை முத்தமிடட்டும்.

-நா

நெஞ்சமாகிய முன்பின் அறிமுகமில்லாத திட்டிலிருந்து திடுமென வேனிலாகிய கதகதப்பான மூச்சு வெளிப்பட்டது.

அவள் உடலின் ஒரு பெருமூச்சாகவும், அவள் நெஞ்சத்தின் கிசுகிசுப்பாகவும் அது என் நெஞ்சத்தை வருடியது.

-தோ

புதைந்துள்ள தனி அடியாழத்திலிருந்து ஒரு நொடி நேரப் பொழுதை விடுதலை செய்கிறது. தனித்தொரு விளக்கினால் ஒளியேற்றப்பட வேண்டிய மூடப்பட்டுள்ள இந்தக் கதவுகளுக்குள் புதியதோர் உலகை அது எழுப்பட்டும்.

-நா

என் தோழனே, உன் நெஞ்சின் கமுக்கத்தை உனக்குள்ளேயே மூடி மறைத்திடாதே. என்னிடம், என்னிடம் மட்டுமே கமுக்கமாக அதைக் கூறிவிடு.

-தோ

போற்றுதலுக்குரியது என்பது ஒரு பிறந்த குழந்தையே.

-ப.ப

பொதுவான பொருண்மைகளையும், நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியதே இந்த உலகம். அந்த உலகில் அன்பைப் பொழிந்திடவே இறைவன் பெண்ணை அனுப்பியுள்ளான்.

-ஆ

மென்மையாகப் புன்னகை சிந்துகிறாய் நீ, மென்மையாகக் கிசுகிசுக்கிறாய் நீ. என் நெஞ்சம் அதைக் கேட்கிறது, என் காதுகளல்ல.

-தோ

என் காதலியிடம் நான் நிலையாக அளிக்கப்பட்டுள்ளேன் என்பது மட்டும் போதுமானதன்று. அதிலிருந்து நாள்தோறும் புதிது புதிதான பரிசுகளை உருவாக்க வேண்டும்.

-நா

தன்னை அளித்துக் கொள்வதிலேயே அவன் மகிழ்ச்சி காண்கிறான். இறைவனுடைய படைப்பே அந்த அளிப்பாகிறது. -சா

எல்லோரிலும் உயர்ந்த இறைவனை அறிவதே மாந்தனின் ஒரே தேடுதல். -ஆ

'குழந்தை எதை எடுத்து வருகிறது உன்னிடம்? 'உலக முழுவதற்குமான நம்பிக்கையையும், அதிலிருந்து பிறக்கும் மகிழ்ச்சியையும்.' -நா

அனைவருக்கும் அன்பின் மூலம் தன்னையே அளித்துக் கொண்டிருக்கிறான் இறைவன். -ஆ

என் அருமைக் காதலியே, என் குரலைப் பற்றிய எண்ணமே இல்லாமல் உன்னிடம் நான் பேசிக் கொண்டிருந்தேனே. அதற்கு நீ ஏதாவது வகை வைத்தாயா? (அதில் நீ ஏதாவது பொருள் கண்டாயா?) சொல்லிவிடு, வாழ்க்கையின் வரம்புகளையெல்லாம் தாண்டி எங்கிருந்தோ ஓர் அறிவுரை கொணர்ந்தது. -நா

என் அன்பே, பேசிடு. நீ என்ன பாடினாய் என்பதை வாய்திறந்து சொல்லிடுவாய். இருட்டிவிட்டது. விண்மீன்கள் முகில்களில் மறைந்து விட்டன. இலைகளினூடே காற்றுப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. -தோ

என்னைக் கவர்ந்திழுத்த குரல்களை நான் தேடியலைந்தேன். எனினும் தேடுதல் பயனளிக்கவில்லை.

இனி என் அமைதியின் ஆன்மாவில் உனது மொழிகளை அமர்ந்து கேட்கவிடு. -எ

நாம் இருவரும் முதன் முறையாகச் சந்தித்தபோது, என் நெஞ்சம் இசையில் ஒலித்துக் கொண்டிருந்தது. என்றும் தொலைவிலேயே இருக்கும் அவள் இனி என்றும் உன்னருகிலேயே தங்கியிருப்பாள். -நா

என் கனவுகளாகிற விண்ணில் மிதந்து கொண்டிருக்கும் பொன்மாலை முகில் நீ. -தோ

அன்பின் நேயக் கைகள் போல, என் குழந்தாய்! இந்த என் பாடலானது தன் இசை அலைகளால் உன்னைத் தழுவிக் கொள்ளும். - -வ.பி