ՔՕC)
மறவர் சீமை
மன்னரது விடுதலைக்காகப் போராடிய நாட்டுப் பற்றுள்ள மக்கள் இன்னும் ஓய்ந்து விடவில்லை. ஆனால் இதற்குள்ளாக இந்த அடிமைக்கு முடிவு வந்துவிட்டதே என்பது எனது கவலை என்பதை மன்னரிடம் தெரிவித்துவிட்டால் நிம்மதியுடன் செத்து விடுவேன்.....
இத்தகைய எண்ணச் சுழல்கள், அவரது இதயத்தில் இருள்போல கவிழ்ந்து கொண்டிருந்தது. துப்பாக்கி வேட்டுக்களை மக்கள் ஆரவாரம், போர்க்குரல் அவரது செவிகளில் மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தன. சோர்வும், களைப்பும் அவரை உறக்கத்தில் சொக்க வைத்தது. எத்தனையோ நாட்கள் - இரவிலும், பகலிலும் கிட்டதாத உறக்கம்! நீண்ட உறக்கம்.
இது என்ன பெருங்கூட்டம். இது இராமநாதபுரம் அரண்மனை வளாகம் அல்லவா? சேதுபதி மன்னர் கொலுவீற்று இருக்கும் அரசன் மண்டபம் இராமலிங்க விலாசம் அரண்மனையேதான். தசரா திருவிழாக் காட்சிபோல் அல்லவா தெரிகிறது. அரண்மனை வாசலில் வாழை மரங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டு இருப்பதுடன் தென்னை, பனை, தாழைக்காய் குலைகளுடன் மங்களகரமான காட்சி
அளிக்கிறது.
இராமலிங்க விலாசத்தின் உள்ளும், با p)فهر கூடியுள்ள மக்களது முகங்களில் வெள்ளைத்தனைய மகிழ்ச்சிப் பெருக்கு, ஆசார வாசலில் இருந்து கொலு மண்டபம் வரை விரிக்கப்பட்டுள்ள சிவப்புக் கம்பளத்தின் இருமருங்கிலும் சமஸ்த்தான அலுவலர்களும் சேவகர்களும், வரிசையாக சீருடைகளில் நிற்கின்றனர். அவர்கள் யாருடைய வருகையையோ ஆவலுடன் எதிர்பார்த்து நிற்பதாகத் தோன்றுகிறதே. அவர் யாராக இருக்கும்?
அதோ எதிர்பார்க்கப்பட்டவர் வருகிறார். ஒரே பரபரப்பு. அரண்மனை நாதசுரக் குழுவின் மங்கல இசை. இராமநாதபுரம் சொக்கநாதர் கோயில் தேவதாசிகள் சதிராடிய வண்ணம், ரோஜா மலர்