உள்ளடக்கத்துக்குச் செல்

உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/ஓடுகளப்

விக்கிமூலம் இலிருந்து

15 ஓடுகளப் போட்டிகள்

(SPORTS MEET)

ஓடுகளப் போட்டி நிகழ்ச்சிகளை, தனித்திறன் போட்டிகள் என்றும், விளையாட்டுப் போட்டிகள் என்றும் கூறுவார்கள். நாம் ஓடுகளப் போட்டிகள் என்றே கூறுவோம்.

இந்தப் போட்டிகள் இரண்டு வகைப்படும்.
1. தரமான போட்டிகள் (Standard Meet)
2. தரமற்ற போட்டிகள் (Non-standard Meet)

தரமான போட்டிகள் என்பது, அகில உலக அமெச்சூர் கழகம் அமைத்துத் தந்துள்ள விதிகளின்படியே நடைபெறுவதாகும்.

தரமற்ற போட்டிகள் என்பது, அந்தந்த வட்டாரத்தினருக்கு ஏற்ப, வசதிக்கேற்ப, இடத்திற்கேற்ப அமைத்துக் கொள்வதாகும்.

1. தரமான போட்டிகள்
ஓடுகளப் போட்டிகளை நடத்துகிற விதி முறைகள்

ஒடுகளப் போட்டிகளை நடத்துவதற்கு, மிகவும் தேர்ச்சியான திட்டமும், தயாரிப்பும் தேவை. ஆர்வமும் அனுபவமும் நிறைந்த பலரின் ஒத்துழைப்பும் தேவை.

திட்டம் தயாரித்தல் : தேர்ந்த ஆட்களை பணியில் இயக்குதல் போன்ற செயல் முறைகளை, இங்கே தொகுத்துக் காண்போம். ஆதலால், நாம் இதனை 3 வகையாகப் பகுத்துப் பார்ப்போம்.

1. போட்டிகளுக்கு முன்புள்ள பணிகள் (Pre-meetwork)

2. போட்டிகளின்போது செய்ய வேண்டிய வேலைகள் (Meet work)

3. போட்டிக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய Gauss, so 5 sir (Post meet work)

1. போட்டிகளுக்கு முன்புள்ள பணிகள்

ஓடுகளப் போட்டிகளை நடத்துவதற்கென்று, நிர்வாகக்குழு நிச்சயமாகத் தேவைப்படுகிறது. (Organising Committee).

தலைமையிடமாகக் திகழும் நிர்வாகக்குழு, பல துணை செயற்குழுக்களை (Sub-Committee) அமைக்க வேண்டும்.

துணைக் குழுக்களின் பெயர்களும் கடமைகளும் 1. 1. விளம்பரக் குழு (Publicity Committee)

போட்டிகள் நடைபெறும் தேதி, இடம், போட்டி நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய குறிப்புக்களை இந்தக் குழு விளம்பரப்படுத்தும் பத்திரிக்கை, ரேடியோ, போட்டி நிரல் சீட்டுகள் மூலமும் இது எல்லோருக்கும் அறிவிக்கின்ற பணியை, ஏற்றுக் கொள்கிறது.

3.2. ஓடுகளத்தரை மற்றும் உதவி சாதனக் குழு Committee for the Grounds and equipments:

போட்டிகளுக்கான மைதானத்தைக் கேட்டு, அனுமதி வாங்கி நிகழ்ச்சிகள் நடத்தும் இடங்களில் குறியீடுகளை அமைத்து, வேண்டிய விளையாட்டு உதவிப் பொருட்களை சேர்த்து, சுமுகமாக தடையின்றி போட்டிகள் நடத்தும் செயல்களை மேற்கொள்கிறது.

3.3. அதிகாரிகளை நியமிக்கும் குழு (Committee for the officials)

போட்டிகளை நடத்தும் திறமை பெற்றிருக்கும், அதிகாரிகளுக்கு எழுதி, அவர்களது ஒப்புதலைப்பெற்றுக் கொண்டு, அதிகாரிகள் அடங்கிய பட்டியலையும் இந்தக் குழு தயாரிக்க வேண்டும்.

நிர்வாகக் குழுவின் அனுமதியுடன், தலைமை அதிகாரியையும் நியமிக்க வேண்டும்.

3.1 இருக்கைகள், தங்கும் வசதிகள் அமைத்துத்தரும் குழு. (Committee for accommodation and seating arrangements)

வெளியூரிலிருந்து வருகிற போட்டியாளர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் தங்கும் வசதிகளை செய்து தருதல்; விளையாட்டுப் போட்டி விழா நடைபெறும் பந்தல், உட்காரும் இருக்கை வசதிகள்; போட்டியாளர்கள் தங்கி ஒய்வுகொள்ளும் இடங்கள், பார்வையாளர்கள், விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் இடவசதிகள்; கார்கள் மற்றும் வாகனங்கள் நிற்க வசதிகள் போன்றவற்றை, இந்தக்குழு செய்து தரவேண்டும்.

3.5 வரவேற்புக் குழு (Committee for reception)

போட்டிகள் நடைபெறுகின்றபோது, அழைக்கப்பட்டிருக்கும் சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை வரவேற்று, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கைகளில் அமர்த்தும் பணியைக் கைக்கொள்ளும் குழுவாக இது அமைந்திருக்கிறது.

3-6. ஓடுகளத்தின் அலங்காரம் மற்றும் வைபவக்குழு.

கண்களுக்கு கவர்ச்சியாகவும் பசுமையாகவும் பந்தய மைதானம் தோற்றம் தருவது போன்று அலங்காரம் செய்தல், பந்தயத் தொடக்கவிழா, வெற்றிப் பரிசளிப்பு விழா, இறுதி விழா போன்றவை சிறப்பாக நடைபெறுவதற்காக, காரியமாற்றுதல், வெகுமதிகள் வெற்றிக் கோப்பைகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பும், இந்தக் குழுவைச் சார்ந்ததேயாகும்.

3 7. சிற்றுண்டி, மற்றும் கலை நிகழ்ச்சி அமைப்புக்குழு. (Committee for Refreshment and entertainment)

போட்டியாளர்கள், அதிகாரிகள் , சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள் போன்றோருக்கு அவ்வப்போது பருகபானம், சிற்றுண்டியும் வழங்குதல். போட்டி நிறை வுறுகிற நேரத்தில் பட்டு ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதும் இந்தக் குழுவின் பொறுப்பாக அமைகிறது.

38. பெயர்ப்பதிவு, போட்டி நிரல் தயாரிக்கும் குழு. (Committee for Entries and Programmes)

இந்தக் குழுவானது, நுழைவு மனுவை, முன்கூட்டியே போட்டியாளர்களுக்கு அனுப்பி, அவர்களின் ஒப்புதலை நேரத்தில் பெற்று, பதிவு செய்து அவர்களுக்கான ஒட்ட எண்கள் (Numbers) ஒதுக்கி, அவற்றிற்கான பதிவேட்டில் எழுதி நிரப்பி, குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத்தில், தடையின்றி நடக்க ஏற்பாடு செய்கிற பொறுப்பை ஏற்றிருக்கிறது.

இத்தகைய பொறுப்புக்களை, கீழ்க்காணும் முறைகளில் செய்யலாம் நிகழ்ச்சி நிரல் (Programmes) புத்தகத்தில்.

1. மேல் அட்டையில் போட் கடத்தும் நிறுவனத்தின் பெயர், விழாவுக்கு வருகிற முறையே விருந்தினரின் பெயர் போட்டிகள் நடைபெறும் இடம், நாள், நேரம் முதலிய விவரங்களைக் குறிக்கவேண்டும்.

2. பல்வேறுபட்ட குழுக்கள், துணைக் குழுக்கள் முதலியவற்றையும், குழுக்களில் இடம் பெற்றிருப்போரின் பெயர்களையும் குறித்திட வேண்டும்.

3. போட்டிகளை நடத்துகிற அதிகாரிகளின் பெயர்கள், அவர்கள் பொறுப்பேற்றிருக்கும் துறை பற்றியும் குறித்திட வேண்டும்.

4. போட்டியில் பங்கேற்கிற குழுக்களை (Clubs) அகரவரிசைப்படுத்தி, போட்டியாளர்களின் பெயர்களையும் திரப்பிட வேண்டும்.

5. போட்டி நிகழ்ச்சிகள் வரிசையை (order of events). குறித்து, என்னென்ன நிகழ்ச்சிகள், எந்தெந்த நேரத்தில் நடைபெறும் என்பதைக் குறித்துக் காட்டுதல்.

6. ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சியிலும் ஏற்படுத்தம் பட்டிருக்கும் முந்தைய சாதனைகள் (Records).

7. முழுமையாக நிரப்பு தற்குரிய வெற்றி எண் குறிப்பேடு.

போட்டி கிகழ்ச்சிகள் வரிசையை தயாரிக்கும் முறை

1. ஒட்டப் போட்டிகள் என்றால், தடைதாண்டும் போட்டி, விரைவோட்டம், நெடுந்துர ஓட்டங்கள், தொடரோட்டங்கள் என்று வரிசைப்படுத்தி, தயாரிக்க வேண்டும்.

2. ஒட்டப்போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். நேரத்திலேயே, களப்போட்டிகளும் அடுத்தடுத்து நடத்திட வேண்டும்.

3. விரைவோட்டக்காரர்கள் எல்லோரும், தாண்டும் போட்டிகளில் பங்கு பெறுகின்றார்கள் என்பதால் இரும்புக்குண்டு எறியாளர்கள், தட்டெறிதல், சங்கிலிக் குண்டு வீசுதல் போன்ற நிகழ்ச்சிகளில், பங்குபெறுகின்றார்கள் என்பதால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஒரே சமயத்திவ் நிகழ்ச்சிகள் வரிசையில் சேர்க்காமல், நேரம் கொடுத்து வரிசைப் படுத்த வேண்டும்.

4. கோலூன்றித்தாண்டும் போட்டி, உயரம் தாண்டுதல், தட்டெறிதல், வேலெறிதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து முடிய அதிக நேரம் பிடிக்கும் என்பதால், இத்தகைய நிகழ்ச்சிகளை, முன்கூட்டியே ஆரம்பித்து நடத்தப்படுவது போல, நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக கொள்ள வேண்டும்.

2. போட்டி நடைபெறும் போதுள்ள வேலைகள் (Meet Work)

1. போட்டியில் பங்கு பெறுகின்ற போட்டியாளர்கள் : நடத்துகின்ற அதிகாரிகள் அனைவரும், போட்டி தொடங்குகின்ற நேரத்திற்கு சற்று முன்னதாகவே வந்த விட வேண்டும்.

2. அதிகாரிகளுக்குரிய அடையாள அட்டைகள், போட்டியைக் காட்டும் நிகழ்ச்சி நிரல் பிரதிகள், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான குறிப்பேடுகள், அனைத்தையும் கொடுத்திட வேண்டும்.

3. போட்டியாளர்களுக்குரிய எண்கள், (Numbers) : நிகழ்ச்சி நிரல் பிரதிகள், மற்றும் அவர்களுக்குரிய வழிகாட்டும் அறிவுரைக் குறிப்புகள் அனைத்தையும் தந்து விட வேண்டும்.

4. போட்டியாளர்கள் அணிவகுப்பு, உறுதி மொழி எடுத்தல் போன்றவற்றுடன் போட்டிகளைத் தொடங்கிட வேண்டும்.

5. நிகழ்ச்கி நிரல் வரிசைக்கு எற்ப, நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தவேண்டும்.

6. ஒவ்வொரு போட்டியின் இறுதிப்போட்டி முடிந்ததும், வெற்றி மேடை, பரிசளிப்பு நிகழ்ச்சியை உடனே நடத்திட வேண்டும்.

7. போட்டிநிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்தபிறகு, எல்லா போட்டியாளர்களும், விளையாட்டுப் போட்டியின் முடிவு விழாவுக்காகக் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் வந்து கூடிட வேண்டும்.

8. முடிவு விழாவில், வெற்றிக் கேடயங்கள், நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் முதலியவை வழங்கப்படும்.

9. பிறகு, நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிவு பெறும்.

3. போட்டிக்குப் பிறகுள்ள வேலைகள் 1. விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பிறகு, கணக்கு வழக்கைச் சரிசெய்து விட வேண்டும். மற்றவர்களிடமிருந்து கைமாற்றாக வாங்கி வந்தப் பொருட்களைக் கொண்டு போய் கொடுக்க வேண்டும்.

2. போட்டிகளுக்கு உதவி செய்த அனைவருக்ரும், நன்றி தெரிவித்துக் கடிதம் எழுத வேண்டும். நேரில் சொல்வதும் நல்லதுதான்.

11 தரமற்ற போட்டி நிகழ்ச்சிகள் உலக விதிகளுக்கு உட்படாமல், வசதிக்கேற்ப நடத்துகின்ற போட்டிகளைத் தான், தரமற்ற விளையாட்டுப் போட்டிகள் என்கிறோம்.

உலக விதிமுறைகளைப் பின்பற்றாமல், நடைமுறைக்கு உதவுமாறு பல புதிய விதிகளை ஏற்படுத்திக் கொண்டு, அதிக எண்ணிக்கையில் (மாணவர்களை) போட்டியாளர் களைப் பங்கு பெறச் செய்யும் உத்தி, இந்த விளையாட்டுப் போட்டிகளில், கடைபிடிக்கப்படுகிறது.

இருக்கின்ற கொஞ்ச வசதிகளே, இந்தப் போட்டிக்கு போதுமானது. இதில் வெற்றி பெறுகிறவர்களின் சாதனைக்கு அவ்வளவு பெறுமிதமில்லை, என்றாலும், குழுக்களுக்குப் பெருமை போய்ச் சேருகிறது. அவ்வளவு தான்.

இந்தப் போட்டியில் இடம்பெறும் சில பிரிவுகள்.

1. குழுக்களின் கூட்டுப் போட்டி (Team or mass Athletics)

2. சலுகைப் போட்டிகள் (Handicap sports)

3. தகவல் வழி போட்டிகள் (Telegraphic sports)

4. திறமறியும் போட்டிகள் (Tabloid sports)

குழுக்களும் கூட்டுப்போட்டியும்

அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கு பெறுகிற போது, ஒடுகளப் போட்டிகளை திட்டமிட்டு நடத்த வேண்டும்.

1. மாணவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒரு குழு என்றால் 20 முதல் 25 இருக்கலாம்.

2. சில போட்டி நிகழ்ச்சிகளில் அவர்களைப் போட்டி யிடச் செய்யலாம்.

ஓட்ட நிகழ்ச்சிகள் (அ) ஒரு குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வட்டம் (lap) சுற்றி ஓடி வர, ஒருவர் பின் ஒருவராகச் செய்தல். இதில் எந்தக்குழு குறைந்த நேரத்தில் ஓடி முடிக்கிறதோ, அதுவே வென்றதாகும். இதற்கு தொடர் முறை (Follow on method) என்று பெயர்.

ஆ) தொடரோட்ட (Relay) போல, எதிரெதிரே மாணவர்களைப் பிரித்து நிற்கச் செய்து (100 மீட்டர் தாரம்). தறி ஓட்டம் போல. (Shuttle Relay) ஒடிடச் செய்தல். இதற்கு தறிமுறை (Shuttle method) என்று பெயர்.

இ) ஒவ்வொரு மாணவனும் குறிப்பிட்ட தூரத்தை (85 மீட்டர் தூரம்) ஒடச் செய்து, எந்தக் குழு குறைந்த நேரத்தில் மொத்தத்தில், ஒடி முடிக்கிறதோ, அந்தக் குழு வென்றதாக அறிவித்து, அதற்கான வெற்றி எண்களை அளிக்க வேண்டும். (5, 3, 2.) என்பது போல) இதற்கு குழுப் போட்டி முறை (Zonal method) என்று பெயர்.

கள நிகழ்ச்சிகள் நீளம் தாண்டுதல், தட்டெறிதல், இரும்புக்குண்டு போடுதல் போன்ற நிகழ்ச்சிகளில், குழுக்களைப் பங்கு பெறச் செய்து, அதிக தூரம் தாண்டுகிற, அதிக தூரம் எறிகிற குழுக்களுக்கு, வெற்றிப் பரிசினை அளிக்கலாம்.

களப் போட்டிகளும் இதே போல, தொடர் முறை, தறி முறை, குழுப் போட்டி முறை மூன்றையும் கடைப் பிடிக்கலாம்.

2. திறன் குறைந்தோர்க்கு, சலுகைப் போட்டிகள் திறன் குறைந்தோரையும், சலுகை முறையில் வாய்ப்பளித்து, சமமாகப் போட்டியிடுகின்ற முறை, இப்போட்டிகளில் பின்பற்றப்படுகிறது.

(உ. ம்) 100 மீட்டர் ஒட்டப் போட்டி என்றால், திறன் குறைந்தவர்களை, 10 அடி அல்லது 20 அடி தூரம் முன்னே நிற்க வைத்து, ஒடச் செய்து, போட்டியிட வைப்பதாகும்.

திறன் குறைந்தவர்க்கு ஒரு வாய்ப்பு தருகிற சலுகைப் போட்டியேயாகும்.

3. தகவல் வழிப் போட்டிகள் பல இடங்களில், ஊர்களில் போட்டிகளை நடத்தி, அந்த முடிவுகளை தந்தி, டெலிபோன் மூலமாகத் தகவல் தர வேண்டும்; அந்த சாதனைகளுக்கேற்ப, முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதில் ஒரு குறை என்னவெனில், பல இடங்களில் போட்டிகள் என்கிற போது, அந்தந்த இடம் சூழ்நிலை காரணமாக, சாதனைகள் வேறுபடும், திறமைகளை வெளிப்படுத்த முடியாத தன்மையும் அமையும் என்பது மற்றபடி, இந்த முறைப் போட்டியினால் நேரம் வீணாகாமல், பணச் செலவு அதிகமாகாமல் மிச்சம் பிடிக்கலாம். காப்பாற்றலாம்.

4. திறனறியும் போட்டிகள் (Tabloid Sports) இந்த முறைப் போட்டிகளில் கலந்து கொள்பவர்க்காக, முதலிலேயே, சாதனை நேரத்தையும் தூரத்தையும் (Time and distance) தீர்மானமாகக் குறித்து வைத்து விட வேண்டும்.

தரம் I தரம் II தரம் III
(உ.ம்)
100 மீட்டர் தூரம் 12.5 வினாடி 13 வினாடி 14 வினாடி
நீளம் தாண்டல் 15 அடி 14 அடி 13 அடி
இரும்புக்குண்டு எறிதல் (12) 30 அடி 28 36


ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு வண்ண ரிப்பன் என்று தெரிவித்திட வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒடி முடிப்பவர்க்கு: துரத்தில் தாண்டுபவர்க்குக், குறிப்பிட்ட ரிப்பனைக் கொடுத்து, கெளரவித்திட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட 3 நிகழ்ச்சிகள், 3 தரங்கள். இதில் ஒவ்வொரு மாணவனும் போட்டியிட்டு முயற்சிக்கிறான். மூன்று நிகழ்ச்சியிலும் குறிப்பிட்ட சாதனையைக் கடந்தால் தான், ரிப்பன் தரப்படும். ஒன்றில் கடக்க முடியாமற் போனாலும், ரிப்பன் கிடைக்காது.

அதிக எண்ணிக்கையில் ரிப்பன் பெற்ற (ஒவ்வொரு ப்ேபனுக்கும் வெற்றி எண் எவ்வளவு என்று குறித் திருக்க வேண்டும்.) குழுக்களே, வெற்றிக்குழு என்று அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் மாணவர்களைப் பங்குபெறச் செய்கிற போது : மாணவர்களை சிறுவர், இளையோர் மூத்தவர் என்று பிரித்தல்; குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் மாணவர்களைப் போட்டியிட வைத்தல்; திறமுள்ள மாணவர்களை சேர்க்காமல் இருத்தல்; சலுகைப்போட்டி முறையைப் பயன்படுத்துதல்; எல்லோரும் கட்டாயமாகப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆணையிடுதல்; மாறுவேடப் போட்டி, போன்றவற்றை அனுமதித்தால் போன்றவற்றிலும் ஆசிரியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.