உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/விளையாட்டு

விக்கிமூலம் இலிருந்து

16. விளையாட்டு நாள் விழா

(PLAY DAY)


பள்ளிகளுக்கிடையே நடைபெறுகிற போட்டிகளுக்குப் பதிலாக, பெண்களுக்கென்று, பள்ளிகளுக்குள்ளேயே நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளே விளையாட்டு நாள் என்ற பெயரைப் பெற்றிருந்தன. அதுவே மாறி பக்கம் பக்கமாக உள்ள பள்ளிகள் எல்லாம் வந்து, கலந்துகொண்டு, களிப்படைகிற மார்க்கத்திற்காகப் பின்னர், மாற்றம் செய்யப்பட்டது.

பல பள்ளிகள் வந்து கலந்துகொண்டாலும், இது போட்டிகன் போல நடத்தப்படுவது அல்ல.

கூடி விளையாடுவது தான். எதிர்த்து விளையாடுவது அல்ல.

விளையாட்டு நாளின் குறிக்கோளானது, ஒவ்வொரு மாணவனும் ஏதாவது ஒரு விளையாட்டில் அவசியம் பங்கு பெற்றாக வேண்டும் என்பது தான்.

விளையாட்டு நாள் விழாவின் பயனும் பெருமையும்

1. பலதரப்பட்ட மகிழ்ச்சி தரும் விளையாட்டுக்கவில், பெருவாரியான எண்ணிக்கையில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, பேரின்பம் பெற உதவுகின்றது.

2. சமூகத்தொடர்பு கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது.

3. தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப் பங்களை அளிக்கிறது. 4. புறவெளிப் போட்டிகளில் ஏற்படுகிற குறைகளைக் களைந்து, குதூகலம் பெறும் நலனை ஏற்படுத்தித் தருகிறது.

விளையாட்டு நாள் விழாவை நடத்தும் முறைகள்

1. பள்ளிக் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுகிற நிகழ்ச்சியாதலால், இதனை ஒரு நாளிலோ அல்லது நாள் பகுதிக்குள்ளோ நடத்தலாம்.

2. நிகழ்ச்சிகளை நடத்த, பல குழுக்களை அமைத்துக் கொள்ள வேண்டும் (உ. ம்.) விளம்பர்க்குழு : நிகழ்ச்சி நிரல் குழு வரவேற்புக் குழு வசதிக்குழு : விளையாட்டு பொருட்கள் குழு ; சிற்றுண்டிக்குழு சிறப்புக் கொண்டாட்டக்குழு என்று பலவகைக்குழுக்கள்.

3. விளையாட்டு நாள் விழா நடைபெறும் நாள், இடம், நேரம், பின்பற்ற வேண்டிய நிகழ்ச்சி நிரல் போன்ற ஒற்றை. பள்ளிகளுக்கு முன்கட்டியே தகவல் தந்து, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் வருகிற குழந்தைகள் எண்ணிக்கையையும் பெற்றுக்கொள்ள வேண்டும். -

4. வருகிற குழந்தைகள் எண்ணிக்கைக்கேற்ப தங்கும் இடவசதி கழிவறைகள் வசதி : உணவு வசதி, தண்ணிர் ஆசதி, போன்றவற் நிற்கும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

5. என்னென்ன நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதற்கேற்ப, ஆடுகளங்களைத்தயார் செய்து வைத்து, அதற்குரிய உதவிப் பொருட்களையும் நிறைவாக ஏற்பாடு செய்து வைத்தல் வேண்டும்.

6. பள்ளிகளிலிருந்து வரும் குழந்தைகளை, பல குழுக்களாகப் பிரித்து, அவர்கள் மாறி மாறிச் சென்று விளையாட்டில் பங்குபெறும் வழி முறைகளையும், அவர்களுக்குத் தெளிவாக விளக்குதல் வேண்டும்.

7. எல்லா குழுக்களுக்கும் சமவாய்ப்பு, நிறைவான வாய்ப்புகள் கிடைக்கும்படி, கவனமாகவும் பொறுப்பாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. நிகழ்ச்சி நிரலில், சிறுசிறு விளையாட்டுகள, கோபுரப் பயிற்சிகள் லெசிம் போன்ற தாளலயப் பயிற்சிகள், சாகசச் செயல்கள் போன்ற மகிழ்ச்சிதரும் செயல்கள் இடம்பெறுகிற முறையில் இருக்கவேண்டும்.

9. நிகழ்ச்சிகளுக்கிடையே பானங்கள் வழங்குதல் நேரத்திற்கு உணவு கொடுத்தல் போன்றவற்றையும் சரியாகத் தருதல் வேண்டும்.

10. நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்ற பிறகு எல்லோரையும் ஒரிடத்தில் கூடச்செய்து, அவர்கள் தங்களது திறமைகளைக் காட்டுகிற சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் (ஆடல், பாடல், ஒப்பனை, மாறுவேடப்போட்டி, சிறு சிறு நாடகம் போன்றவை).

11. ஒவ்வொரு பள்ளியும் தமது குழந்தைகள் மூலம் அலை நிகழ்ச்சியை அளிக்கவும் வாய்ப்புக்கள் தரலாம்.

12. இப்படி செயல்விளக்கம், சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்ற பிறகு, முடிவு விழா ஒன்றிற்கும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

13. விழாவுக்குத் தலைமை ஏற்க ஒருவர், வரவேற்புரை, அறிக்கை வாசித்துப் பரிசுகள் வழங்குதல், நன்றி. நவிலல், நாட்டுப்பண் இப்படியாக முடிவு விழா நடைபெற ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.

14. எல்லா நிகழ்ச்சிகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடைந்து இருட்டுவதற்கு முன் குழந்தைகள் வீடு போய்ச் சேர்வது போல, விளையாட்டு நாள் விழாவை நிறைவு செய்தல் வேண்டும்.

வசதிக்காக, விளையாட்டு நாள் விழா ஒன்றின் நிகழ்ச்சி நிரல்பற்றி, கீழே கொடுத்திருக்கிறோம்.

விளையாட்டு நாள் விழா நிகழ்ச்சி கிரல் (மாதிரி)

நாள் : 18-8-1989.
நேரம் : மாலை 2 மணி முதல் 6 மணி வரை.
இடம் : ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரி.

நிகழ்ச்சி :
1. பள்ளிக் குழந்தைகளின் குழு கூடுதலும், அணி வகுப்பும்.
2. கொடியேற்றுதல்-திறப்பு விழா.
3. விழா நாள் பற்றிய விளக்கமும் குறிப்பும்.
4. விளையாட்டு நிகழ்ச்சிகள்.

(அ) தாளலயச் செயல்கள்.
(ஆ) சாகசச் செயல்கள்.
(இ) சிறு விளையாட்டுக்கள்.
(ஈ) பாட்டும் கதையும் இணைந்த செயல்கள்.

5. இடைவேளை-சிற்றுண்டி நேரம்.

6. ஒவ்வொரு பள்ளியும் பங்குபெறும் நிகழ்ச்சிகள் செயல் விளக்கம், சிறப்புப் பயிற்சிகள்.

7. மேடை முன் கூடுதல் : மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்.

8. சிறப்புக் கூட்டம் (முடிவு விழா).

(அ) வரவேற்புரை.
(ஆ) விழா அறிக்கை வாசித்தல்.
(இ) தலைவர் சிறப்புரை.
(ஈ) பரிசுகள் வழங்குதல்.
(உ) நன்றி உரை.

9. நாட்டுப் பண்.