உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/செயல்

விக்கிமூலம் இலிருந்து

17. செயல் மாட்சியும் கண்காட்சியும்



(DEMONSTRATIONS AND EXIBITION)


பள்ளியில் நடைபெறுகின்ற முக்கிய நிகழ்ச்சிகள் அல்லது விழாக்கள் போன்றவற்றில் நடத்தப்பெறுகின்ற உடல் பயிற்சிகளை செய்து காட்டுகின்ற மாட்சியையே செயல்: மாட்சி என்று அழைக்கிறோம்.

செயல் மாட்சியின் சிறப்பு நோக்கங்கள்

1. மாணவர்களுக்கு சிறப்பான முறையில், பல்வேறு வகையான உடற் பயிற்சிகளைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பு: கிடைக்கிறது.

2. உடற் கல்வியில் மாணவர்களுக்கு உண்மையான விருப்பமும், உறுதியான ஆர்வமும் ஏற்படுத்தும், வழிவகை கிடைக்கிறது.

3. செம்மையாக செயல்படவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மற்றவர்களை மகிழ்வித்து, தாங்களும் மகிழ்ந்துவிடுகிற வாய்ப்பு, உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் கிடைக்கிறது.

4. பள்ளி நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களாக வருஆை தருகின்ற பெற்றோர்கள், பொதுமக்களுக்கு, உடற்கல்வியைப்பற்றி தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் கூடிய உன்னத சூழ்நிலையை உண்டாக்கித் தருகிறது.

பள்ளியில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள்
1. திருவிழா நாட்கள்.
2. பள்ளி நிறுவனர் விழா.
3. பெற்றோர்கள் விழா.
4. சிறப்பு விருந்தினர் வருகை விழா.
5. பள்ளி ஆண்டு விழா.
6. முன்னாள் மாணவர் சங்க விழா.
7. தேசிய தின விழாக்கள்.
8. எதிர் பாராமல் வருகிற முக்கிய விழாக்கள்.

நடத்துகின்ற முறைகள்

1. கூட்டுப் பயிற்சிகளுக்குரிய செயல் மாட்சிக் காட்சில் காக, முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும், அதற்கு ஏதுவாக, நாள், நேரம் இடம், காலம் போன்ற வற்றையும் தீர்மானித்து விட வேண்டும்.

2. நிகழ்ச்சி நடப்பதை பெற்றோர், பொதுமக்கள் முதலியவர்களும், முடிந்த வழிகளில் எல்லாம், விளம்பரம் செய்திட வேண்டும்.

3. என்னென்ன உடற்பயிற்சிகளைக் கூட்டுப்பயிற்சி யில் சேர்க்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டு, தீர்மானிக்க வேண்டும்.

4. எந்தெந்தக் குழு, என்னென்னப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதையும் சரியாக, தெளிவாக, உறுதி செய்ய வேண்டும்.

5. தனித்தனியாக ஒவ்வொரு குழுவையும், அதற்குரிய கயிற்சிகளை அளித்து, பிறகு, எல்லா குழுக்களையும் ஒன்று சேர்த்து செய்கிற செயல் மாட்சிக்கு, பலமுறை ஒத்திகைகள் தேவை.

6. எந்த இடத்தில், செயல் மாட்சி நிகழ்ச்சி நடை பெறுமோ, அந்த இடத்திலேயே ஒத்திகை பார்ப்பதும் இல்லது.

7. விழாவுக்கான சிறப்பு விருந்தினரையும் மு ன் கூட்டியே தெளிவு செய்து, அழைப்பிதழுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

8. நுழைவு வாயில், வெளியே செல்லும் வழி போன்ற வற்றை அமைத்து, பார்வையாளர்கள் வசதியாக வந்து, இருந்து, போக ஏற்பாடு செய்வது நல்லது.

செயல்மாட்சி நடைபெறும் நாளுக்கு முன்னதாக, மேலே கூறிய விவரங்களைக் கடைப்பிடித்த பிறகு, விழா நிகழ்ச்சிக்காக அதே நாளில் செய்ய வேண்டிய விஷயங்கள்.

1. பார்வையாளர்களுக்காக இருக்கைகள். மேடை அலங்காரங்கள்.

2. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் குறியீடுகள்.

3. நிகழ்ச்சிக்குத் தேவையான உதவி சாதனங்களைத் தயாராக சேகரித்து வைத்திருத்தல்.

4. பங்கேற்கும் மாணவர்களுக்குரிய சீருடைகள்.

5. பங்கேற்கும் மாணவர்கள் தங்கி, உடையை சீசி செய்ய இட வசதிகள்.

6. ஒலி, ஒளி அமைப்பு.

7. குடி நீர் வசதி, கழிவறை வசதிகள்.

8. முதலுதவி வசதிகள்.

இவையெல்லாம், முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயங்களாகும்.

செயல்மாட்சிக்குரிய நிகழ்ச்சி நிரலைத் தயாரித்த பிறகு, அவற்றைப் பற்றிய விரிவுரை விளக்கமும் தரல் வேண்டும்.

ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றிய விரிவுரை விளக்கமானது. ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து மற்றொரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து கொள்ளவும், பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சி பற்றி அறிந்து கொள்ளவும் உதவி செய்கிறது.

செயல் மாட்சி நிகழ்ச்சியை குறித்த நேரத்திற்குள், (6.5கிம உங்களுக்குள்) முடித்துக் கொள்ளவேண்டும். அதிக நேரம் எடுத்துக் கொள்வது, பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும்.

தேசிய கீதம் இசைத்து, விழாவை முடித்திட வேண்டும்.

செயல் மாட்சிக்குரிய செயல் முறைகள்

1. சீருடற்பயிர்சிகள் (Calisthenics)

2. உதவி சாதனங்களுடன் செய்கிற உடல்பயிற்சிகள்.

3. அணி நடைப்பயிற்சிகள்

4. தாளலயப் பயிற்சிகள் (இம்மி, கோலாட்டம் போன்றவை)

5. இந்திய நாட்டுத் தேகப்பயிற்சிகள் (தண்டால், பஸ்கி)

6. குட்டிக்கரணப் பயிற்சிகள்.

7. ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள்.

8. தற்காப்புக்கலைப் பயிற்சிகள்.

9. ஒடுகளப்போட்டிகள், விளையாட்டுக்கள் பற்றி சித்தரிக்கும் சிலைக்காட்சி அமைப்பு (Tableaux) கண்காட்சி.

அறிவு விளக்கமும், ஆர்வமும் அளிக்கக் கூடிய வகையில், கண்காட்சியை அமைக்க வேண்டும்.

விளையாட்டு, உடல் நலம், உடல் பயிற்சிகள் போன்ற தலைப்புக்களில், படங்கள், ஒவியங்கள், மாதிரிச்சீலைகள், கலரொட்டிகள் மூலமாக கண்காட்சியை அமைக்கலாம்.

பார்வையாளர்களுக்குத் தெளிவாக விளக்க, மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கண்காட்சிக் கென்று தனி இடம் வேண்டும். வந்து போகும் வழிகளும் தாராளமாக இருக்கவேண்டும்.

கண்காட்சியை நடத்த, பொறுப்புள்ள நடுவரை தலைமையேற்கச் செய்து, அவர் தலைமையின் கீழ், ஒரு குழுவை அமைத்து விடுகிறபோது, கண்காட்சி சிறப்பு மிக்கதாக, பயனளிப்பதாக அமைந்து, பெருமை சேர்க்கும்.