உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/விளையாட்டுச்

விக்கிமூலம் இலிருந்து

18. விளையாட்டுச் சுற்றுலா

(GAMES TOURS)


பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் தான், மாணவர் களுக்கான விளையாட்டுச் சுற்றுலாவை, ஏற்பாடு செய்து, நடத்திட முடியும்.

சுற்றுலாவுக்கான பணச் செலவு மற்றும் விடுமுறை நாட்கள் பற்றி, முன்கூட்டியே திட்டமிட்டு நடத்துகிற போது தான், சுற்றுலா சுகமாகவும், சுமுகமாகவும் அமையும்.

சுற்றுலா வெற்றிக்கு, சில குறிப்புக்கள்

1. சுற்றுலாவுக்கு எந்த இடத்திற்குப் போகிறோம் எந்த நாளில் புறப்படுகிறோம் ? எவ்வளவு நாட்கள் எவ்வளவு பணம் செலவாகும் என்றெல்லாம் முதலில் திட்டமிடல் வேண்டும்.

2. செலவு முழுவதையும் பள்ளி ஏற்றுக் கொள்கிறதா ? பகுதி செலவை ஏற்கிறதா ? மாணவர்களே முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்களா என்பதையெல்லாம், முன்னதாகவே, திட்டமிட்டுத் தீர்மானிக்க வேண்டும்.

8. பஸ் அல்லது ரயில் மூலம் பயணம் செய்வது என்றால், அதற்குரிய சலுகைக் கட்டணம் போன்ற வற்றிற்கு மனு செய்து, ஏற்பாடு செய்துவிடல் வேண்டும்.

4. சுற்றுலா செல்லும் இடங்களுக்கு, முன் கூட்டியே உரியவர்களுக்கு எழுதி, தங்கும் வசதி, உணவு முதலிய வற்றிற்கு ஏற்பாடுகளை செய்துவிட வேண்டும்.

5. புறப்படும் நாள், நேரம், செல்லும் இடங்கள். ஒவ்வொரு இடத்திலிருந்தும் புறப்படும் நேரம். பயணத்திற் குரிய பஸ் அல்லது ரயில்.நேரம் முதலியவற்றைத் தயாரிக்கும் திகழ்ச்சிக் குறிப்புப் பட்டியலையும் தயாரித்து, அதன் படியே தாமதப்படுத்தாமல், ஒழுங்காக நடத்திட வேண்டும்.

6. சுற்றுலாவுக்கு பணம் தான் முக்கியம். கையில் தேவைக்கு அதிகமாகப் பணம் வைத்திருப்பது, புதிய இடங்களில் ஏற்பட்டு விடுகிற எதிர்பாராத தொந்தரவுகளை சமாளிக்க உதவும்.

7. புதிய இடங்களுக்குப் போவதால், பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். அதுபோலவே, செலவழிக்கும் பணத்திற்குரிய ரசீதுகளையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பண விஷயத்தில் மிகவும் பொறுப்பு அவசியம்.

8. சுற்றுலா நேரத்தில், சுகவீனத்திற்கு பலர் ஆளா வது சகஜமே. பொதுவாக, உபயோகப்படுத்துகிற சில முக்கிய மருந்துகளையும், முதலுதவி தருகிற மருந்துகளையும், வாங்கி வைத்திருப்பது நல்லது.

9. சுற்றுலா செல்பவர்கள் மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருப்பது இயற்கைதான். இருந்தாலும் அவர்கள் எல்லை மீறி நடந்து கொள்ளாமல், ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க, சுற்றுலா பொறுப்பேற்றிருக் கும் ஆசிரியர், சிரமத்துடன் செயல்பட வேண்டியிருக்கும்.

எனவே, மகிழ்ச்சியாகவும், மனோகரமாகவும் சுற்றுலா அமைய, ஆசிரியர்கள் மாணவர்கள் கூட்டு ஒத்துழைப்பு அவசியமாகும்.

இவை எல்லாம் திட்டமிட்டு, தீர்மானித்து செல்கிற போது, தேவைக்கு மேலே ணவசதி இருக்கிறபோது, சிறப்பாக அமையும். அதுவும் பொறுப்புணர்ந்து நடந்து கொன்கிறபோது, பேரின்பமாகவும் அமைந்துவிடும் என்பதை உறுதியாகக் கூறலாம்.