உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/மாணவர்களின்

விக்கிமூலம் இலிருந்து

19. மாணவர்களின் இனப்பிரிவும், பரிசும் பாராட்டும்

(CLASSIFICATIONS & AWARDS)


இனப்பிரிவு என்பது மாணவர்களை தரம் வாரியாகப் பிரிப்பதாகும். வயது, உடல் அளவி (Size) அமைப்பு, விளையாட்டுத் திறமை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களைக் குழு குழுவாகப் பிரிப்பதாகும்.

சிறுவர், இளையோர், மூத்தோர் (Sub - Junior, Junior Senior, Super senior) எனப்பிரிக்கலாம்.

இவ்வாறு பிரிப்பதற்கு முன் கவனிக்கவேண்டியது.

1. நல்ல தேகத்துடன், எல்லா விளையாட்டிலும் கலந்து கொள்ள முடிகிற மாணவர்கள்.

2. உடல் குறையுடன் ஒரு குறிப்பிட்ட விளையாட் டுக்களில் மட்டுமே பங்கு பெற முடியும் என்கிற மாணவர்கள்.

3. மருத்துவ ஆய்வின் அடிப்படையில் விளையாட்டில் விலக்களிக்கப்பட்ட மாணவர்கள்.

என்று முதலில், 3 வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். தரமும் திறமும் உள்ள மாணவர்களை இனவாரியாகச் பிரிக்க பல முறைகள் கையாளப்படுகின்றன.

முதல்முறை

வயது + உயரம் - எடை
3

முடிவடைந்த வயது, அங்குலத்தில் உயரம், பவுண்டில் எடை ஆகிய மூன்றையும் கூட்டி, 3-ஆல் வகுக்கவேண்டும்.

இப்படி வருகின்ற எண்ணிக்கையின் அடிப்படையில்: நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்.

பிரிவு கூட்டில் வரும் எண்ணிக்கை
A 90க்கு மேல்
B 85லிருந்து 9 வரை
C 75 லிருந்து 85 வரை
D 75க்குக் கீழாக

இரண்டாவது முறை

டாக்டர் C. H. மெக்ளாயின் இனப்பிரிவு முறை

இவர் ஒடுகளப் போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்கள் பலரை ஆய்வு செய்து, ஒரு முடிவுக்கு வந்தார்.

1. வயது (Chronological age)

2. உடல்திறம் (Physiological age)

3. உயரம் (Height)

4. எடை (Weight) இந்த நான்கையும் பயன்படுத்திக் கொள்ளும் வழி முறைகளை வகுத்து, ஒரு சூத்திரத்தை (Formulla) அளித்தார்.

இவர் கொடுத்துள்ள கணக்குப்படி, 17 ஆண்டுகள் வரை வயதையும்; 14 வயதுக்குப் பிறகு உயரத்தையும்; எல்லா வயது மட்டங்களிலும் உள்ள எடையையும் இனப்பிரிவுக்காக எடுத்துக் கொள்ளலாம் என்பது தான்.

(அ) கூட்டு=29 வயது + 6 உயரம் + எடை

17 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதையும் 17 ஆகவே, கொள்ள வேண்டும்.

(ஆ) கூட்டு=6 உயரம் + எடை

27 ஆண்டு வயதும், அதற்கு மேற்பட்ட வயதும் உடைய கல்லூரி மாணவர்களுக்கு இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.

(இ) கூட்டு= 10 வயது + எடை

இந்த வாய்ப்பாட்டை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சிறார்களுக்கு உயரம் தேவையற்றதாகத் தோன்றுகிறது.

மூன்றாவது முறை

சூத்திரம் 11/2 உயரம் (அங்குலத்தில்) + எடை (பவுண்டில்).

இந்த சூத்திரத்தின்படி, வருகிற மொத்த எண்ணிக்கையைக் கொண்டு. நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்.

1. மிக மூத்தோர் - 200க்கு மேல்
2. மூத்தோர் - 180க்கு மேல் 200க்கு கீழ்
3. இளையோர் - 160க்கும் 180க்கும் கீழ்
4. சிறுவர் - 180க்கும் கீழாக
நாகான்காவது முறை

கூட்டு = வயது + உயரம் + l/10 எடை

நடந்து முடிந்த ஆண்டுகளை வயதாகவும் அங்குலத்தில் உயரத்தையும் பவுண்டில் எடையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி வருகிற மொத்த எண்ணிக்கையைக் கொண்டு, கீழ்வரும் கணக்கில், இனப்பிரிவு செய்யலாம்.

மிக மூத்தோர் = 85 ம் அதற்கு மேலும்
மூத்தோர் = 80 முதல் 85 வரை.
இளையோர் = 75 முதல் 80 வரை.
சிறுவர் =70 முதல் 75 வரை.
ஆரம்ப வகுப்பினர் =65 முதல் 70 வரை.
குழந்தைகள் = 65க்கும் கீழாக

உதாரணம்

15 ஆண்டுகள் - 15
5 அடி 2 அங்குலம் - 6.2
80 பவுண்டு எடை - 8 (80 ÷ 10 = 8)
----
மொத்தம் 85
----
85 என்று கூட்டு வருவதால், அந்த மாணவர் மிக மூத்தோர் பிரிவில் சேர்கிறார்.

பெண்களுக்கான இனப்பிரிவு

பெண்கள் வளர்ச்சியைக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களையெல்லாம், ஒரே பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம்.

15 வயதுக்குட்பட்டவர்களை பிரித்து விடுகிற முறை.

1. கூட்டு = வயது + உயரம் + எடை

2. கூட்டு = வயது + உயரம் + எடை

முடிந்த ஆண்டுகளை வயதாகவும், அங்குலத்தில் உயரத்தையும், பவுண்டில் எடையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரிப்பதன் நோக்கம், மாணவர்களைப் போட்டியில் ஈடுபடுத்தி, திறமையை வளர்ப்பதற்கேயாகும்.

போட்டியில் பங்கு கொள்பவர்கள், தங்கள் திறமையைப் பற்றி தெரிந்து கொள்வதுடன், மற்றவர்கள் திறமைக்கும் மேலாகப் போட்டியிட்டு, போராடி வெற்றி பெறுகின்றார்கள்.

வெற்றிக்குப் பரிசும் பாராட்டும், மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றன. புகழும் பெருமித சாதனையும் கிடைக்கின்றது.

பரிசுகளையும் பாராட்டுக்களையும் வழங்குவதில் ஒரு மரபை மேற்கொள்வது அவசியமாகின்றதல்லவா!

விலை மதிப்புள்ள பரிசுப் பொருட்களைத் தருகிற பொழுது, அவற்றை விற்றுவிடுகின்ற மனிதர்கள் நிறையது பேர்கன் உள்ளனர்.

ஆகவே, பரிசின் மதிப்பை பணம் கொண்டு அளிப்பதால், அப்படிப்பட்ட பரிசைத் தவிர்த்து, பிற்காலத்தில் அவை உதவுகின்ற வகைகளில் தருவது தான் புத்தி சாலித்தனமான செயலாகும்.

1. நற்சான்றிதழ்கள் வழங்குதல்.

2. அதிக விலையற்ற பரிசுப் பொருட்கனை வழங்குதல்.

3. வென்ற குழுவுக்கு வெற்றிக் கேடயங்கள் அளித்தல்.

4. மதிப்புப் பலகையில், வெற்றியாளர்களின் பெயர்களை, சாதனையுடன் எழுதி வைத்தல்.

5. வெற்றியாளர்களின் புகைப் படத்தையும், மதிப்புப் பலகையில் ஒட்டி வைத்தல்.

உடற்கல்வியானது உடலை வளர்க்கவும், திறமையை மிகுதிப்படுத்தவும், முயற்சிக்கின்ற மனப்பாங்கை உயர்த்தவும் நிறைய போட்டிகளில் பங்கு பெறவும், வெற்றி பெறவும் கூடிய வாய்ப்புக்களை வழங்குகிறது.

அந்த வாய்ப்புக்கனை அதிகப்படுத்த, ஆர்வமூட்ட இப்படிப்பட்ட பரிசுகளும் பாராட்டுக்களும் பெரிதும் உத்துகின்றன. உற்சாகம் ஊட்டுகின்றன.