உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்மொழி காப்போம்/முழங்கட்டும் போர்ப்பறை

விக்கிமூலம் இலிருந்து

18. முழங்கட்டும் போர்ப்பறை

எடுப்பு


ஆர்த்து முழங்கட்டும் பொருநர்பறை - புகழ்
சேர்த்து விளங்கட்டும் தமிழர்படை
(ஆர்த்து)

தொடுப்பு


பார்த்துப் பகைவர்கள் வேர்த்துப் புறமிடப்
பாட்டுப் புறம்பெறக் காட்டும் திறல்வர
(ஆர்த்து)

முடிப்பு


காட்டுப் புலியெனக் காட்டும் மறவர்கள்
காப்பர் தமிழினைச் சேர்ப்பர் புகழ்மொழி
நாட்டில் அரியணை ஏற்றி வணங்கிட
நாட்டம் மிகுந்ததைக் காட்டும் வகையினில்
(ஆர்த்து)

வேற்றுப் புலமென வேட்டை யிடவட
நாட்டுப் புலத்தவர் வேட்டுப் புறப்படின்
தோற்றுப் பிறக்கிடத் தூக்கி எறிந்திடும்
தோளுண் டெமக்கெனத் தோம்தோம் எனுமொலி
(ஆர்த்து)


(9-3-1987)



பொருநர் - போர் செய்யும் மறவர்