தாய்மொழி காப்போம்/வாளேந்தி வா மகனே
Appearance
19. வாளேந்தி வாமகனே
எடுப்பு
கொம்பூது கொம்பூது மறவா - வந்த
கூடலர் ஓடிடச் சாடுவோம் என்றுநீ
(கொம்பூது)
தொடுப்பு
தெம்பெங்கே படர்மார்பில் திறலெங்கே தடந்தோளில்
திறம்பாடி மறம்பாடி நெஞ்சுக்குள் உரமேறக்
(கொம்பூது)
முடிப்பு
தமிழாலே ஒன்றானார் தமிழ்மாந்தர் என்றாலே
தலைதூக்க முடியாது தமிழ்நாட்டில் பகையாளர்
சுமையாக வாழாமல் சோற்றுக்கே சாகாமல்
சூடேற்றித் தோளேற்றித் தமிழா நீ வாவென்று
(கொம்பூது)
வந்தமொழி நாடாள வாய்த்த தமிழ் பீடேக
வாழ்வதிலே யாதுபலன்? வாளேந்தி வாமகனே
எந்தமதம் எக்கட்சி என்றெதுவும் பாராமல்
எமதுதமிழ் எமதுதமிழ் என்றோடி வாவென்று
(கொம்பூது)
(25-2-1987)