தாய்மொழி காப்போம்/போர் தொடுப்பாய்
Appearance
20. போர் தொடுப்பாய்
எடுப்பு
தமிழா நீயொரு போர்தொடுப்பாய் - யாரும்
தமிழை இகழ்ந்தால் இடர்செய முனைந்தால்
(தமிழா)
தொடுப்பு
அமிழ்தாம் எனுமொழி அதற்கொரு துயரா? போர்
ஆடவா பகை சாடவா மலர் சூடவா
(தமிழா)
முடிப்பு
தடையாபொரு படையா அஃதுடையும் என மொழிவாய்
தவிடாய்ச்சிறு பொடியாய் அது படநீஉடன் எழுவாய்
விடைபோல்நடை யுடையாய்எரி விழியால்கனல் சொரிவாய்
விடுவேல் எறி நெடுவாள்தொடு சுழல்வாய்சமர் புரிவாய்
(தமிழா)
கலையாமனம் பெறுவாய்பகை மலையாஎன [1]மலைவாய்
கடலாஅது படையாஎனில் படகாயதில் திரிவாய்
உலையாதெழு பொருவாய்சமர் உமியாய்விடும் பகையே
உயிரா இது மொழியாஇரு விழியாஎன நினைவாய்
(தமிழா)
- ↑ (மலைவாய் - போர்புரிவாய்)