உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டு உலகம்/உழைத்தேன்! உயர்ந்தேன்!!

விக்கிமூலம் இலிருந்து

உழைத்தேன்!
உயர்ந்தேன் !!



வேளாண்மைத்துறையில் பட்டதாரியாக விரும்பி வந்த அந்த இளம் நங்கை, ஓய்வு நேரத்தை உல்லாக மாகக் கழிக்க, நகர்வலம் சென்று கொண்டிருக்கிறாள். எதிரே, ஓட்டப்பந்தய மைதானம் ஒன்று தென்படுகிறது. என்ன நடைபெறுகிறது என்று பார்ப் பதற்காக எட்டிப்பார்க்கிறாள் ஆவலினால்.

பெண்களின் தட்டெறியும் போட்டி நிகழ்ச்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பொழுது உலகப் புகழ் பெற்று ஒப்பற்ற வீராங்கனையாகத் திகழ்ந்த டமாராபிரஸ் (Tamara press) என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

பேச்சுத் தொடர்பு நட்பாக மலர்கிறது. பலமுறை பேசிப் பேசி, டமாரா பிரஸ்ஸின் வீரதீரச் செயல்களை செவிமடுத்த பிறகு, அந்த இளம் மங்கையின் இதயத்திலே திடீர்த் திருப்பம் மின்னி பளிச்சிடுகிறது. வேளாண்மைத்துறைக் கல்வியை தூர விலக்கிவிட்டு, விளையாட்டுத்துறைக் கல்வியில் சேர்ந்து கொள்ளும் காத்திடின்’ என்று பாடத் தோன்றுகிறது ஓர்ட்டரைப் பார்த்து.

பயிற்சியும் பழக்கமும் இல்லாமல், இடையிலே எட்டு ஆண்டுகள் பந்தயங்களில் கலந்து கொள்ளாமல் இப்பொழுதும் 198 அடிக்கு மேல் எறியக் கூடிய ஆற்றல் பெற்று விளங்கும் ஆல்பிரட் ஓர்ட்டரைப் பார்த்து, ‘வரலாற்றுக் கதாநாயகனாக விளங்கும் மாவீரனே! வாழ்க நின் வலிமை!’ என்று வாழ்த்தத் தோன்றுகிறது அல்லவா!

வாழ்க நின் வலிமை என்று வாழ்த்துவோம். வல்லமை மிக்க வீரனைப் போல் நம் நாட்டிலும் ஒரு சிலர் தோன்ற, காலம் கருணையுடன் வழியமைக்கட்டும் என்று சிரம் தாழ்த்துவோம்!

வலிமையும் வல்லமையும் தர இறைவனை வேண்டுவோம்.

சென்றபோது, அந்தப் பெண்ணைப் பின் தொடர்வாருக்கும் பெரிதும் துன்பமே மிகுதியாகப் போயிற்று.

5 ஆண்டுகளுக்குள்ளே 10 முறை, தன்னுடைய உலக சாதனையை உலக வரலாற்றிலேயே மாற்றி மாற்றி எழுதும் வண்ணம் வெற்றிபெற்று பெரும் சாதனை புரிந்தாள். 1971-ம் ஆண்டிலிருந்து 1974-ம் ஆண்டிற்குள்ளே சோவியத் நாட்டின் வெற்றி வீராங்கனையாக இரண்டு முறையும், ஐரோப்பா தேசத்தின் வெற்றி ராணியாகவும், 1972-ம் ஆண்டின் ஒலிம்பிக் பந்தயத்தின் தங்கப்பதக்கம் பெறுபவளாகவும் பெற்ற வெற்றிகள் கற்பனைக்கும் எட்டாத அற்புதமல்லவா!

229 அடி 4 அங்குல தூரம் எறிந்து உலக சாதனையை தட்டெறியும் போட்டியில் பொறித்திருக்கும் அந்தப் பருவ மங்கையின் பெயர் ஃபெய்னா மெல்னிக் (Fayina Mellik) என்பதாகும். உலக வரலாற்றிலேயே 70 மீட்டர் துாரத்தை முதன்முதலாக எறிந்தவர் என்ற பெரும்புகழைப் பெற்றிருக்கும் பெய்னா பிறந்த ஊர், சோவியத் நாட்டிலே உக்ரேய்னியன் எனும் பகுதியில் உள்ள பகோடர் எனும் சிறு கிராமம். பிறந்த நாள் 1945-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதியாகும்.

கிராமப்புற கன்னியாக விளங்கிய மெல்னிக், பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, கல்லூரிக் கல்விக்காக உக்ரேனியத் தலைநகரிலே கீவ் என்ற நகருக்கு வந்த போதுதான், இந்த அதிசயம் நடந்தது. விரும்பிய விளையாட்டை வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்தி விடவில்லை. ஆழ்ந்த அக்கறையுடன் நிதர்சனமான நம்பிக்கையுடன், பூமியும் வெட்கும் பொறுமையுடன் உழைத்தார் மெல்னிக்.5 ஆண்டுகளுக்குள்ளே அகிலமே வியக்கும் வண்ணம் அரிய சாதனை புரிந்த மெல்னிக், வேட்கையும் விருப்பமும் மேலிர்டுகிறது. ஆர்வந்தானே அனைத்துக்கும் வழிகாட்டி.

தட்டெறியும் போட்டிக்குத் தயார் செய்ய தன்னை ஆட்படுத்திக் கொள்கிறாள் அந்த மங்கை. தினந்தோறும் பயிற்சிகள் கடுமையாகவும் விமரிசையாகவும் தொடர்கின்றன. நாள்தோறும் தட்டெறியும் திறமையும் வலிமையும் நயமுடன் பெருகிக்கொண்டே வருகின்றன. 1970-ம் ஆண்டு, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடந்த ஓட்டப் பந்தயங்களுக்கான போட்டிகளில், ஒரே பரபரப்பு.

இதுவரை யாருடைய கவனத்தையும் ஈர்க்காத ஒரு இளம் பெண், 25 வயது நிரம்பிய எழில் மங்கை, அந்தப் போட்டியின்போது புகழ் மேடையில் புளகாங்கிதத்துடன் நிற்கிறாள். இரு நாடுகளின் பிரதிநிதியாக வந்திருந்த பெரும் புகழும் திறமையும் படைத்தடமாரா தானிலோவா, இரினாசோலன்ட்சேவா போன்ற பெண் மணிகளை பின்னடையச் செய்து, தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்று விடுகிறாள்.

அத்துடன் நின்று விடவில்லை. 57.96 மீட்டர் தூரம் எறிந்து உலக மேடையில் பவனி வரத் தொடங்கிய அந்த இளம் வீராங்கனை, 5 ஆண்டுகளுக்குள் 12 மீட்டர் துாரம் அதிகமாக எறிகின்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு அற்புதமாக உழைத்திருக்கிறாள்.

எரிகின்ற துாரம் எண்ணுவோரின் கற்பனையையும் கடந்து சென்று கொண்டிருந்தது. 1971-ம் ஆண்டு 63.96 மீட்டர் தூரம். 1972-ம் ஆண்டு 67.32 மீட்டர் துாரம் என்று எறியும் துாரம் ஏறிக்கொண்டே பயிற்சி செய்யும்போது 73 மீட்டர் துாரம் எறிந்து காட்டியதைக்கண்ட விளையாட்டுத் துறை வல்லுநர்கள், இந்த அதிசய வீராங்கனையால் மேலும் அற்புத சாதனைகளை நிறுவமுடியும் என்றே நம்புகின்றார்கள்.

1980ஆம் ஆண்டிலே மாஸ்கோவிலே நடக்கும் ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறேன் என்கிறார், அந்த நாளிலே 35 வயதாக இருக்கப்போகும் மெல்னிக் ‘வயது என்னை ஒன்றும் செய்து விடாது’ என்று ஆர்வத்துடன் பேசுகின்றாள்.

உலக அரங்கிலே பெண்களுக்கான தட்டெறியும் நிகழ்ச்சி எனறால், ஃபெய்னா மெல்னிக்கின் நினைவு வராதவர்களே இல்லை எனலாம். குறைந்த காலத்லேயே, பேரளவில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய பெண்மணியைக் கேட்கிறவர்களுக்கு, ‘உழைப்பே உயர்வின் ரகசியம்’ என்று கூறுகிறாள். அந்த ரகசியமானது' உழைத்தேன்! உயர்ந்தேன்! என்பது தானே!

‘எந்தப் பணியிலும் இதயம் விரும்பி ஈடுபட்டால், இனிய தியாகங்களைச் செய்துவிட்டால் எண்ணியது கைகூடும்’ என்ற பொன்மொழிக்கு உண்மையான சான்றாகத் திகழும் பெய்னா மெல்னிக்கின் உழைப்பையும் முனைப்பையும் நம் நாட்டு இளைஞர்களும் சிறுமிகளும் ஏற்றுகொண்டால், தமிழகம் தரணியில் தலை சிறந்த நாடாக திகழும் என்பது சொல்லாமலே விளங்கும், சுகம்தரும் மொழியாகும்.