தந்தையும் மகளும்/23
Appearance
23அப்பா! மழையானது மலைகளில்தான் அதிகமாகப் பெய்யும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! மழை எப்படி உண்டாகிறது என்பது உனக்கு தெரியுமல்லவா? கடல்போன்ற பெரிய நீர் நிலைகளிலுள்ள நீர் சூரிய வெப்பத்தால் நீராவியாக மேலே செல்கின்றது. அங்கே குளிர்ந்த காற்று பட்டதும் நுண்ணிய நீர்த்துளிகளாக மாறுகிறது அந்த நீர்த்துளிக் கூட்டத்தையே மேகம் என்று கூறுகிறோம். அந்த மேகம் மீண்டும் குளிர்ச்சி அடையுமானால் பெரிய நீர்த்துளிகளாக மாறுகின்றன. பெரிய நீர்த்துளிகள் கனம் தாங்காமல் கீழே மழையாகப் பெய்கின்றன.
மலைகள் உயரமாய் இருப்பதால் குளிராக இருக்கின்றன. ஆதலால் மேகங்கள் மலைமீது செல்லும்பொழுது குளிர்ந்து மழையாகக் கொட்டுகின்றன ஆதனால்தான் ஆறுகள் எல்லாம் மலையிலேயே உற்பத்தியாகின்றன