தந்தையும் மகளும்/24

விக்கிமூலம் இலிருந்து


24அப்பா! மழை பெய்யாத ஊர் உண்டா?

அம்மா ! பெரிய பாலைவனங்களைப்பற்றிப் படித்திருப்பாய். அங்கே மழை மிகவும் அபூர்வமாக பெய்யும். அதனாலேயே அவை பாலைவனங்களாக இருக்கின்றன. அவை பாலைவனங்கள இருப்பதால் அங்கே ஊர்கள் கிடையா.

ஆனால் தென் அமெரிக்காலிலுள்ள பெரு என்னும் நாட்டின் தலைநகரமாக இருப்பது லிமா என்பதாகும். அங்கே அடிக்கடி பூகம்பம் உண்டாவதுண்டு. அதற்காக அங்கே வீடுகளில் சுவரைப் பச்சைச் செங்கல்லைக்கொண்டு ஆறடி கனமுள்ளதாகக் கட்டுகிறார்கள். அப்படியானால் அங்கே மழை பெய்யும்போது அவர்களுடைய வீடுகள் பச்சை மண்ணாக ஆகிவிடுமல்லவா? அதனால் அவர்கள் மழை என்றால் அஞ்சி நடுங்குவார்கள் அல்லவா? ஆனால் அவர்களுடைய அதிர்ஷ்டம் ஆண்டு முழுவதும் அங்கே மழை பெய்வதே இல்லை.

அப்படி மழை இல்லையானால் அவர்கள் குடி தண்ணீருக்கு என்ன செய்வார்கள் என்று கேட்பாய்,அந்த நகரத்துக்கு அருகில் ஓடும் ரிமாக் என்னும் நதி அவர்களுக்கு வேண்டிய தண்ணீர் முழுவதையும் கொடுத்து வருகிறது. அதனால் தண்ணீர் வேண்டுமே என்ற கவலை அவர்களுக்குக் கிடையாது

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/24&oldid=1538099" இலிருந்து மீள்விக்கப்பட்டது