தந்தையும் மகளும்/51
51அப்பா! கட்டியாயுள்ள பொருளைச் சூடாக்கினால் திரவமாக இளகி விடுகிறதே. அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! வெண்ணெய்யும் ஐஸும் கட்டியாக இருக்கின்றன, சூடுபட்டால் இளகிவிடுகின்றன. அதற்குக் காரணம் என்ன?
அம்மா! ஒவ்வொரு வஸ்துவும் மூலக்கூறுகளால் ஆனதென்றும் அந்த மூலக்கூறுகள் எப்போதும் அசைந்து கொண்டிருக்கின்றன என்றும் அறிவாய். அப்படி அவைகள் அசைந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட மாதிரியிலேயே அசைகின்றன. அதனால் தான் அவை எல்லாம் சேர்ந்து கட்டியான பொருள்களாக இருந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் வஸ்துவைச் சூடாக்கினால் அப்போது மூலக்கூறுகள் அதிகமாக அசைய ஆரம்பித்து விடுகின்றன. அப்போது அவை குறிப்பிட்ட மாதிரியில் அசைவது போய் தாறுமாறாக அசைவு உண்டாய் விடுகிறது. அதனால் அதன் கட்டியான அமைப்பு மாறிவிடுகிறது. அப்படிப்புது அமைப்பு உண்டான பொருளின் நிலைமையைத்தான் திரவ நிலைமை என்று கூறுகிறோம்.
தண்ணீரை ஐஸாகக் குளிர்வித்தால் அப்போது மூலக்கூறுகள் தாறுமாறாக அசைவது குறைந்து முன்போல் குறிப்பிட்ட மாதிரியில் அசைய ஆரம்பித்து விடுகின்றன. அதனால் ஐஸ் கட்டியாக ஆகிவிடுகிறது.