தந்தையும் மகளும்/63
Appearance
63அப்பா! ஜன்னல் கண்ணாடி கீறிய இடத்தில் வெள்ளி போல் மின்னுகிறதே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! கண்ணாடியில் ஒளிபட்டால் ஒளியின் பெரும் பாகம் கண்ணாடி வழியாக வெளியே போய் விடுகிறது. கண்ணாடியில் படும் ஒளியில் ஒரு சிறிய அளவே கண்ணாடியிலிருந்து நம்முடைய கண்ணுக்கு வந்து சேர்கிறது. அந்த ஒளி கண்ணாடியை நம்முடைய கண்ணுக்குத தெரியும்படி செய்வதற்கு மட்டுமே உதவுகிறது. கண்ணாடியைப் பளபளப்பாக்குவதில்லை.
ஆனால் கண்ணாடி கீறிப்போனால் அந்த இடத்தில் படும் ஒளி கண்ணாடி வழியாக மறுபக்கம் போக முடியாமல் அப்படியே சிறிதளவும் குறையாமல் நம்முடைய கண்ணுக்கு வந்து சேர்ந்து விடுகிறது. அதனால் தான் அந்தக் கீறிய இடம் வெள்ளிபோல் பளபளப்பாகத் தோன்றுகிறது.