தந்தையும் மகளும்/65
65அப்பா! நீலக் கண்ணாடி தூளாக ஆகும் போது நீலமாகத் தோன்றாமல் வெண்மையாகத் தோன்றுகிறதே. அதற்குக் காரணம் என்ன?
அம்மா! நீலக்கண்ணாடி நீலமாகத் தோன்றுவதற்குக் காரணம் என்ன?
அம்மா! சூரிய ஒளி வெண்மையாகத் தோன்றினாலும் அதில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என்று ஏழுநிற ஒளிகள் இருக்கின்றன என்பதை நீ
அறிவாய். அம்மா! சூரிய ஒளியை ஒரு முக்கோண கண்ணாடி வழியாக அனுப்பினால், அது அடுத்த பக்கம் ஏழு நிறங்களுடையதாகச் சுவரில் காண்பதைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? நீலக்கண்ணாடியானது தன்மீது விழும் வெள்ளை ஒளியை அப்படியே நம்முடைய கண்ணுக்கு அனுப்டாமல் நீலக் கிரணங்களை மட்டுமே அனுப்புகிறது. மற்றக் கிரணங்களை அது சாப்பிட்டு விடுகிறது. அதனால் அந்தக் கண்ணாடி நீல நிறமாகத் தெரிகிறது
நீலக் கண்ணாடி தூளாக ஆகும்போதும் அந்தத் தூள்களுக்கு நீலக்கிரணங்களைத் தவிர எனைய கிரணங்களைச் சாப்பிட்டுவிடச் கூடிய தன்மை இருக்கவே செய்யும். ஆனால் அவைகள் மிகவும் சிறியவையாக இருப்பதால் அந்தத் தன்மை அதிகமாகக் குறைந்து போய்விடுகிறது. அதனால் அந்தத் தூள்கள் வெள்ளை ஒளியையே அனுப்புவதாக ஆகிவிடுகின்றன. அதனால்தான் அவை நீலநிற மாகத் தோன்றாமல் வெண்மையாகத் தோன்றுகின்கின்றன