தந்தையும் மகளும்/99
Appearance
99 அப்பா! நன்றாகச் சுவாசத்தை உள்ளே இழுத்துக் கொண்டால் எளிதாக மிதக்க முடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! ஒரு வஸ்துவை தண்ணீரில் போட்டால் அதன் நிறை அதன் அளவுள்ள நீரின் நிறையை விடக்குறைவாக இருக்குமானால் அந்த வஸ்து தண்ணீரில் மிதக்கும். நம்முடைய உடம்பின் நிறை அதன் அளவுள்ள நீரின் நிறையை விடக் கொஞ்சம் கூடியதாக இருப்பதால் தான் நம்முடைய உடம்பு ஜலத்தில் மிதக்க முடிவதில்லை
ஆனால் நாம் நன்றாக சுவாசத்தை உள்ளே இழுத்தால் அப்போது உடம்பின் அளவு கூடுகிறது. ஆயினும் அப்படிக்கூடிய அளவு உள்ளே சென்ற காற்றின் அளவேயாகும், காற்று தண்ணீரைவிட லேசானது என்பதை அறிவாய். அதனால்தான் சுவாசத்தை நிறைத்துக் கொண்டால் நம்முடைய உடம்பு எளிதாக நீரில் மிதக்க முடிகிறது.