தந்தையும் மகளும்/115
115அப்பா! கடுதாசிகளில் வெள்ளை எழுத்துக்கள் தெரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! கறுப்பு மையினால் கறுப்பு எழுத்தும் சிவப்பு மையினால் சிவப்பு எழுத்தும் எழுதலாம் ஆனால் வெள்ளை எழுத்தை எழுத வெள்ளை மை கிடையாதே என்று கேட்பாய். ஆம், வெள்ளை மை கிடையாது உண்மைதான். ஆனால் அத்தகைய கடுதாசியில் தோன்றும் வெள்ளை எழுத்தை வெள்ளை மையினால் எழுதவில்லை என்றால், வெள்ளைக் கடுதாசியை வெளிச்சத்தில் தூக்கிப் பிடித்தால் வெள்ளை நிறமான எழுத்துக்கள் தெரிவதற்குக் காரணம் என்ன?
மரத்தை அறுத்துக் கூழாக்கியே கடுதாசி செய்கிறார்கள். அது சிறிதளவே ஈரமாக இருக்கும் சமயத்தில் அதன்மீது உருளையை உருட்டுவார்கள், அந்த உருளையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். கடுதாசி ஈரமாயிருப்பதால் அந்த எழுத்துக்கள் அதில் பதிந்து விடும்.கடுதாசி உலர்ந்த பின் அந்த எழுத்துக்கள் நம்முடையகண்களுக்குத் தெரிகின்றன.
இத்தகைய எழுத்துக்களை 'நீர்க்குறிகள் என்று ஆங்கிலேயர் கூறுவார்கள். இவைகள் முக்கியமாகக் காணப்படுவது ரூபாய் நோட்டுக்களிலும் பத்திரங்களிலும் அரசாங்கத்தார் உபயோகிக்கும் கடுதாசிகளிலுமாகும்.