தந்தையும் மகளும்/117
Appearance
117அப்பா! அம்மா குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்ததும் அதில் ஏதோ ஒரு கொட்டையை உரைத்துக் கரைக்கிறாளே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! குளத்து ஜலம் கலங்கலாக இருக்கிறது, அதைக் குடிக்க முடியாதல்லவா? அதை எப்படித் தெளிய வைக்கிறது. ஒன்றும் செய்யாமல் வைத்திருந்தால் அது தெளியமாட்டாது, கலங்கலாகவே இருக்கும்.
அதற்காக அம்மா! தேற்றாங்கொட்டை என்று ஒரு கொட்டை கடையில் விற்கிறார்கள். அந்தக் கொட்டையைக் கல்லில் உரைத்து அதை வழித்துத் தண்ணீரில் கலக்கி வைத்திருந்தால் தண்ணீர் தெளிந்துவிடும், குடிக்க நன்றாயிருக்கும்.
தேற்றாங்கொட்டை கிடைக்காவிட்டால் அதற்குப் பதிலாக படிக்காரம் என்று ஒரு பொருள் இருக்கிறது. அதைத் தூளாக்கி தண்ணீரில் போட்டு வைக்கலாம். அப்பொழுது படிக்காரம் தண்ணீரில் கலங்கி நிற்கும் பொருள்களைக் கீழே படியும்படி செய்து விடுகிறது.