உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/119

விக்கிமூலம் இலிருந்து


119அப்பா! கதவுக்கு சாயம் பூசும் பொழுது அதில் எண்ணெய் சேர்த்தாலும் கட்டியாக உலர்ந்து விடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கதவுக்குப் பூசும் சாயத்தை எப்படி உண்டாக்குகிறார்கள் தெரியுமா? வெள்ளை ஈயம் என்று ஒரு பொடி இருக்கிறது. அத்துடன் ஆளிவிதை எண்ணெய்யைச் சேர்ந்து நன்றாக அரைப்பார்கள். எவ்வளவுகெவ்வளவு அதிசுமாக அரைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமான இடத்துக்குப் பூச முடியும். அப்படி நன்றாக அரைத்த பின் அத்துடன் கற்பூரத் தைலத்தைக் கலந்து பூசுவார்கள். நாம் பூசும் சாயம் வெள்ளை ஈயம் தான்; வேறு நிறம் வேண்டுமானால் அதற்குரிய பொடியையும் சேர்த்துக் கொண்டு அரைக்க வேண்டும்.

கற்பூரத்தைலம் சீக்கிரமாக ஆவியாக மாறக்கூடிய தன்மை உடையதாகையால் சாயத்தைச் சீக்கிரமாக உலரும்படிச் செய்கிறது. அப்படி அது உலரும் பொழுது ஆளிவிதைத் தைலம் காற்றிலுள்ள பிராணவாயுடன் கலந்து கட்டியான கோந்து போல் ஆகிவிடுகிறது. சாயத்தை அரைத்துக் கொஞ்ச நேரம் வைத்துவிட்டால் அதன்மீது இந்த மாதிரியான ஒரு படலம் படர்ந்து விடுவதைக் காணலாம்.

இந்தக் கோந்துபோன்ற வஸ்து தண்ணீரில் கரையாது அதனால்தான் சாயம் உலர்ந்த பின் தண்ணீர்விட்டுக் கழுவினாலும் அது போகாமல் இருந்து கொண்டிருக்கிறது, அப்படிக் கட்டியாக ஒட்டிக்கொள்வதால் தான் நாம் சாயம் பூசியுள்ள வஸ்து காற்று மழை பட்டாலும் கெட்டுப் போகாமல் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/119&oldid=1538316" இலிருந்து மீள்விக்கப்பட்டது