உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/129

விக்கிமூலம் இலிருந்து


129அப்பா! தண்ணீர் இல்லாமலே சலவை செய்யலாம் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நாம் நமமுடைய உடைகளைச் சலவை செய்யும்போது தண்ணீரைத்தான் உபயோகிக்கிறோம். ஆனால் நம்முடைய உடைகள் எல்லாம் பஞ்சுத் துணியாலானவை. அவைகள் தண்ணீரில் அதிகமாகச் சுருங்கிப் போவதில்லை. ஆனால் ரோம உடைகள் தண்ணீர் சுருங்கிப்போகும். பஞ்சு உடைகளும் தண்ணீர் பட்டால் சாயம் இழந்து விடக்கூடும், அதனால் துணிகள் சுருங்காமலும் சாயம் இழக்காமலும் சலவை செய்வது எப்படி?

இதற்கு ஒரு முறையை பிரஞ்சுக்காரர்கள் 19ம் நூற்றாண்டின் மத்தியில் கண்டு பிடித்தார்கள். அது தண்ணீரில்லாமல் செய்யும் முறையாயிருப்பதால் "உலர்ந்த சலவை முறை” என்றும், பிரஞ்சுக்காரர்கள் கண்டு பிடித்ததால் "பிரஞ்சுச் சலவை முறை" என்றும் பெயர் பெறும்.

உலர்ந்த முறை என்பதைக் கொண்டு எவ்வித திரவமும் உபயோகிப்பதில்லை என்று எண்ணி விடாதே, நீருக்குப் பதிலாக வேறு திரவங்கள் உபயோகிக்கப்படும். முதலில் பெட்ரோலை உபயோகித்தார்கள். ஆனால் அது எளிதில் தீப்பிடிக்கக் கூடியதாயிருப்பதால் வேறு சில திரவங்களை உபயோகித்தார்கள், ஆனால் அவைகள் விலையுயர்ந்தனவாக இருப்பதால் அவைகளையும் உபயோகிப்பதில்லை. இப்பொழுது இந்த இரண்டு குணங்களும் இல்லாத திரவங்களை உபயோகிக்கிறார்கள்.

துணிகளை இந்தத் திரவங்களில் இட்டால் அவை துணியிலுள்ள எண்ணெய் அழுக்குகளை நீக்கி விடும். அதன் பின் தூசிகளைப் புருசு கொண்டு நீக்கிவிடலாம், இந்தக் காரியங்களை இக்காலத்தில் யந்திரங்களைக் கொண்டே செய்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/129&oldid=1538339" இலிருந்து மீள்விக்கப்பட்டது