உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/168

விக்கிமூலம் இலிருந்து


168அப்பா! பூனையின் முகத்தில் நீண்ட மீசை இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அது இருப்பது அழகாகவும் இருக்கிறது. ஆனால் அது அழகுக்காக ஏற்பட்டதன்று.

பூனையின் மீசை நீளமாயிருக்கும். அது பகற் காலத்தில் சாய்ந்து முகத்துடன் சேர்ந்தே இருக்கும். தனியாக நீண்டு நிற்காது. ஆனால் இரவிலோ அது தனியாக நிற்க ஆரம்பித்துவிடும். பூனை இருட்டில் நடக்கும்போது, நுழைந்து போகக்கூடிய துவாரம்தான் என்று அது அறிந்துகொள்வதற்கு இந்த நீளமான மீசை உதவுகிறது. அந்த மீசையானது இரண்டு பக்கத்திலும் எதிலும் தொடாமல் இருந்தால் அந்த இடம் பூனையின் உடல் நுழையக்கூடிய அகலமுள்ளதாக இருக்கும். அதைக்கொண்டு பூனை இதில் நுழைய முடியும், இதில் நுழைய முடியாது. என அறிந்து கொள்ளும். அதற்காகத்தான், அம்மா! பூனைக்கு நீளமான மீசைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அது பூனைக்கு அதிகமாகப் பயன்படுவதாயிருந்தாலும் நமக்கு பார்ப்பதற்கு அழகாகவே இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/168&oldid=1538485" இலிருந்து மீள்விக்கப்பட்டது