தந்தையும் மகளும்/169
169அப்பா! பூனை சில சமயங்களில் ரோமத்தைச் சிலிர்க்கிறதே, அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! அப்படிச் சிலிர்க்கும்போது அது பார்ப்பதற்கு பயமாகக்கூட இருக்கும். அந்தச் சமயம் அதனருகில் போகாதே, அது உனக்குக் கெடுதல் செய்தாலும் செய்து விடும். ஆனால் அது ரோமத்தை சிலிர்ப்பது எதற்காக?
அம்மா! நமக்குத் திடீரென்று குளிர் ஏற்பட்டால் நம்முடைய ரோமம் சிலிர்த்து விடுகிறது. ஒவ்வொரு ரோமத்தின் வேருடன் சேர்ந்து ஒரு சின்னஞ் சிறிய தசை இருக்கிறது. அந்தத் தசை சுருங்கினால் உடனே ரோமம் நிமிர்ந்து நின்றுவிடுகிறது.
ஆனால் குளிரில்லாத சமயத்திலும் பூனைக்கு ரோமம் சிலிர்த்திருக்கிறதே என்று கேட்பாய். ஆம். அம்மா ! பூனைக்குச் சிலிர்ப்பதற்குக் காரணம் வேறு. பூனைக்கு ஏதேனும் பயம் ஏற்பட்டால் போதும். உடனே ரோமம் சிலிர்த்துவிடும். அப்பொழுது அது பார்ப்பதற்குப் பெரிதாகவும் பயமாகவும் தோன்றும். இந்த மாதிரி ஆகும் போது அதன் விரோதிகள் அதைக் கண்டு அஞ்சி அதனிடம் வராமல் போகும்.
அது போல் நமக்குப் பயம் உண்டாகும்போது ரோமம் சிலிர்ப்பதுண்டா என்று கேட்டால் அது மிகவும் அபூர்வமாகும் என்றே சொல்ல வேண்டும்.