உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/189

விக்கிமூலம் இலிருந்து


189அப்பா! மரங்கள் எல்லாம் சாயாமல் நிமிர்ந்தே வளர்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! சாதாரணமாக மரங்கள் எல்லாம் சாயாமல் நிமிர்ந்தே வளர்கின்றன. அப்படி வளர்வது தான் அவற்றிற்கு நல்லது அம்மா! உனக்கு நிமிர்ந்து நிற்கிறது கஷ்டமாயிருக்கிறதா அல்லது வளைந்து நிற்பது கஷ்டமாயிருக்கிறதா? வளைந்து நிற்கும் போது தான் பாதங்கள் நோவும். அதுபோல் மரங்களும் சாய்ந்து வளர்ந்தால் அப்போது வேர்கள் மரத்தைக் கீழே விழாமல் இறுக்கிப் பிடித்துக் கொள்வதற்கு அதிகமாகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும். மரம் நிமிர்ந்து நிற்பதற்காகவே அதன் வேர்கள் நாலாபக்கங்களிலும் ஒரே அளவாகப் பரந்து வளர்கின்றன. அதே காரணத்திற்காகத்தான் மரத்தின் கிளைகளும் ஒரே பக்கத்தில் உண்டாகாமல் எல்லாப் பக்கங்களிலும் உண்டாகின்றன.

ஆயினும் சில மரங்கள் சாய்ந்து வளர்கின்றனவே. அதற்குக் காரணம் யாது? மரம் சாயாமல் தான் வளர ஆரமபிக்கிறது. ஆனால் அதன் பக்கத்தில் சுவரோ அல்லது வேறு மரமோ இருந்து அதற்கு வரும் சூரிய ஒளியைத் தடுத்துக் கொண்டிருக்குமானால் அது என்ன செய்யும்? சூரிய ஒளி தானே உயிர் தருவது? மரமானது அதைப் பெறுவதற்காகச் சூரிய ஒளி கிடைக்கக் கூடிய பக்கமாகச் சாய்ந்து வளர ஆரம்பித்து விடுகிறது. அம்மா! நம்முடைய தோட்டத்தில் சில தென்னை மரங்கள் நேராகவும் சில தென்னை மரங்கள் சாய்வாகவும் வளர்வதைப் பார். இந்த விஷயம் விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/189&oldid=1538652" இலிருந்து மீள்விக்கப்பட்டது