உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/199

விக்கிமூலம் இலிருந்து


199அப்பா! பூக்கள் குவிந்து விடுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பூக்கள் குவியாமல் இருந்தால் நல்லதுதான். அதன் அழகைப் பார்த்து மகிழ்ந்துகொண்டே இருக்கலாம். ஆனால் செடிகளில் பூக்கள் உண்டாவது நாம் பார்த்து மகிழ்வதற்காகவா? இல்லை. காய்கள் உண்டாவதற்காகவே. பூக்கள் விரிந்தவுடன் வண்டுகள் வந்து மொய்க்கின்றன. அவற்றின் உதவியால் மகரந்தப்பொடி சூல்முடியில் ஒட்டி ஆல்வயிறு சென்று காய்களாக உண்டாகின்றன. அப்படி வண்டுகள் வந்து மொய்ப்பதற்காகவும் அவை வந்து உதவும் வரை மகரந்தப் பையையும் சூல்வயிற்றையும் பாதுகாப்பதற்காகவுமே பல நிறமான இதழ்களும் மணமும் ஏற்பட்டிருக்கின்றன மகரந்தப் பொடி சூல்வயிற்றுக்குள் போய்ச் சேர்ந்தபின் இதழ்களும் மணமும் தேவையில்லை. அதனுல் தான் இதழ்கள் குவிந்து விடுகின்றன. மணமும் போய் விடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/199&oldid=1538675" இலிருந்து மீள்விக்கப்பட்டது