உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நிகழ்வுகளுக்குப் பின்னரும், விடுதலைக்குப் போராடிய நாட்டுப் பற்றாளர்களது உயிரைப் பலிகொண்ட கும்பெனியாரது அட்டுழியங்கள், செய்கைகள் செய்திகளாகவே அமைந்து காணப்படுகின்றன.

இந்தச் செய்கைகள் கும்பெனியாரது நீதியும் சட்டமும் ஊருக்கு, ஊர் ஆளுக்கு ஆள் வேறுபடுவது ஏன்? அவர்களது நீதியும் சட்டமும் இடத்திற்கு இடம் மாறுபடுவதில் இருந்து அவர்களது நீதி விசாரணையும், சட்டமும் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் அப்போதைக்கப்பொழுது அந்த மக்களை ஏமாற்றுவதற்காக கையாண்ட பிரம்மாஸ்திரம் என்பதைத்தான் வரலாறு விளக்குகிறது. விளக்கமாக இருக்கிறது.

மயிலப்பன் சேர்வைக்காரரரைப் பொறுத்த வரையில், இது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆறுமாதங்களுக்கு முன்னர் சித்திரங்குடியில், அவரைத் துரோகிகள், எதிர்பாராத நிலையில் தாக்கி மலைக்கழுகு ஆட்டுக்குட்டியைத் தனது வலிய கால்களாலும் அவைகளில் உள்ள கூர்மையான நகங்களினாலும் குத்தி, அழுத்தி தூக்கிச் செல்வது போல, குண்டுக்கட்டாகப் பிணித்து, சிக்கல் அமில்தாரிடம் ஒப்படைத்தபொழுதே தனது வீரவாழ்க்கையை ராஜவிசுவாசப் பணியை, நாட்டு விடுதலைக்கான பல போராட்டங்களில், அழிந்துவிடாத அவரது உடலும், உயிரும் மாய்ந்து 3 மாதம் முற்றுப்பெறும் தருணம் வந்து விட்டது என்றே முடிவு செய்தார். அவரது கைகளையும், கால்களையும் ஒருமுறை உற்று நோக்கினார். எஃகினைப் போன்ற உறுதியும், ஆற்றலும் இன்னும் இருக்கிறது. அவரது உள்ளத்திலும் உயர்ந்து வளர்ந்து நின்ற ராஜ விசுவாசத்திலும் நாட்டுப்பற்றிலும், எவ்விதக் குறைபாடும் இல்லை....... அப்புறம் எண்ணியது என் நடக்கவில்லை? அது...... காலத்தின் கருவிலே கனியாத கணி! அதுதான் விதி ------ انٹ943ئے

105. இந்த மன்னர் சென்னைக் கோட்டையிலேயே இருபத்தி நான்கு ஆண்டு கால சிறை வாழ்க்கையில் மரணமடைந்து வீரத் தியாகியானார்.