12
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல்.11
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்.12
விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்.13
அறிஞர்க்கு அழகு கற்று, உணர்ந்து, அடங்கல்.14
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை.15
தேம் படு பனையின் திரள் பழத்து ஒரு விதை
வான் உற ஓங்கி, வளம்பெற வளரினும்,
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.16
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள் நீர்க் கயத்துச் சிறு மீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும், அண்ணல் யானை.
அணி தேர், புரவி, ஆட் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.17
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.18
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்வர்.19
பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்.20
உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்.21
கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்.22
அடினும் ஆவின்பால் தன் கவை குன்றாது.23
சுடினும் செம் பொன் தன் ஒளி கெடாது.24
அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது.25
புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது.26
கலக்கினும் தண் கடல் சேறாகாது.27
அடினும் பால் பெய்து, கைப்பு அறாது. பேய்ச் சுரைக்காய்.28
ஊட்டினும் பல் விரை, உள்ளி கமழாதே.29
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.30
சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்
பெரியோர் ஆயின், பொறுப்பது கடனே.31
சிறியோர் பெரும் பிழை செய்தனர் ஆயின்,
பெரியோர் அப் பிழை பொறுத்தலும் அரிதே.32
நூறாண்டு பழகினும், மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர்க் கொள்ளாதே.33
ஒரு நாள் பழகினும். பெரியோர் கேண்மை
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே.34