பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


கோலாகல வாழ்வு இல்லை, வீரத்தின் சின்னமாய் விளங்குகிறான். மாற்றுக் குறையாத மராட்டியத் தங்கம் இந்த நிலையை நீடிக்கவிட்டால் இனி நமக்கு வரும் பங்கம்--என்று அரசு பீடத்தில் அமர்ந்திருந்தவர் அனைவரும் எண்ணிய காலம் அது. 1669-ம் ஆண்டு சிவாஜி ஜாகிர்தார் நிலைக்காக அல்ல சாய்ராஜ்யத்திபதியாவதற்காகவே வேலை செய்கிறான் என்பது விளங்கி விட்டது.

5000 குதிரை வீரர்கள் 2000 காலாட்படைகள் போர் முரசு கொட்டியபடி இப்பெரும் படையைத் தலையை தாங்கி நடத்தி வந்தான் தளபதி அப்சல்கான் குதிரைப் படை கிளப்பிய தூசுபோல சிவாஜியின் வெற்றிகள் இனி ஆகும் என்று எண்ணிணான். கோபத்தோடு உறுதியோடு அசைக்க முடியாத நம்பிக்கையோடு, சென்றான், அப்சல் கான். படையின் ஆர்பரிப்புக்கு இடையிலேயும், அவனுக்கு புறப்படுமுன்பு, தனக்கும் மன்னனுக்கும் நடந்த உறையாடல் காதிலே வீழ்ந்த வண்ணமேயிருந்தது வாழ்க்கையிலே முக்கியமான கட்டம் அது--அவனுக்கு மட்டுமல்ல--அவன் பணி புரிந்துவந்த அரசுக்கே.

"அப்சல்! உன் வாழ்நாளிலேயே மிக முக்கியமான செயலில் இறங்குகிறாய் இதிலே நீ வெற்றி பெறுவதை பொறுத்துத்தான இருக்கிறது பீஜ்பூர் மண்டலத்தின புகழ் என்று மன்னன கூறியபோது, "மன்னா! அந்த மலை எலி, இங்கு உலவுவது நமது மண்டலத்துக்கே இழிவு தருவது என்பது உணருகிறேன். இதோ புறப்படுகிறேன் சிவஜியைச் சிறைபிடித்து வருகிறேன் வெற்றியுடன் திரும்பி வருவேன். இது உறுதி" என்று வீரமாகப் பேசியதும், அப்சல்கானின் நினைவிலே பதிந்து விட்டது. படையைப் பார்க்கிறான் பூரிக்கிறான் தன் திறமையை எண்ணுகிறான் மகிழ்கிறான் சிவாஜியின் கண்முன் இப்படை தோன்றினால் போதும் பீஜபூர் மன்னன்முன் மண்டியிட அந்தமார்தட்டும்