உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


"நானா? வழி காட்டுவதா? சிவாஜி நான் பீஜப்பூர் சுல்தானின் தூதுவன்"

"இல்லை சுவாமி தாங்கள் பார்த்வர்ஷத்தின் பிரதி நிதி ஆரியாவர்த்தத்தை இரட்சிக்க வேண்டிய ஆரியசிரேஷ்டர் தங்களை அப்சல்கான் அனுப்பியிருந்தாலும் சரி; பீஜப்பூர் சுல்தான் அனுப்பியிருந்தாலும் சரி, நான் தங்களை ஆண்டவன் அனுப்பிவைத்த தூதுவர் என்றே கொள்கிறேன். ஆரிய, ஆரியவர்த்தத்துக்கு ஆபத்து நேரிடுவதைத் தடுக்கப் பிரம்ம குலத்தவராகிய உமக்கு உரிமையுண்டு. உமது கடமையும் அதுதான். நான் ஆரிய சேவாசைன்யத்தை நடத்துபவன். கட்டளை பிறப்பித்துவிடும். ஆரியாவர்த்தத்தை அன்னியரிடம் தந்துவிடவா? அப்சல்கானின் அடிபணியவா? ஆரிய நான் அடிபணிவது என்றால் என்ன அர்த்தம்? ஆரிய வர்த்தம் அழிந்தது என்று பொருள்."

கோபிநாத் பண்டிட்ஜி வந்ததோ, சிவாஜியைப் பணிய வைக்க சிவாஜியோ, மேலே தீட்டப்பட்ட கருத்துக்களைக் கொட்டினான் கோபிநாத் முன்பு. கோபிநாத் கூறிவிட்டிருக்கலாம், "சிவாஜி துரோகம் செய்யமுடியாது. நம்பிக்கை மோசம் மகா பாவம் நான் பீஜப்பூர் சுல்தானின் உப்பைத் தின்பவன் அவனுக்கு ஊறுதேட மாட்டேன். அது கயவர் செய்யும் காரியம். தர்ம சாஸ்திரம் இதை ஏற்காது என்று ஆனால் கோபிநாத் அது போல கூறினாரா? இல்லை துரோகம் செய்யக்கூடாது என்ற எண்ணம் இல்லை. ஆரியவர்த்தம் ஆரிய சிரேஷ்டர் சனாதனம் எனும் சொற்களின் சுவையை ரசித்தார் பீஜப்பூர் சுல்தானைக் காட்டிக்கொடுக்க இசைந்தார் வந்தது தூதுவனாக ஒப்புக்கொண்டதோ துரோகியாவதற்கு எவ்வளவு நேரம் கோபிநாத் பண்டிட்ஜியின் மனதிலே போராட்டம் இருந்ததோ நாம் அறியோம் துரோகி என்று உலகு எதிர்காலத்திலேனும் தூற்றுமோ

அ--5