82
யினால் நாட்டுக்குக் கேடுவருகிறதென்று பலர் பழித்துரைக்கக் கேட்டு பாரிசில் பல கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருந்தார். போராடிப் போராடியே, உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார்.
ஆகவேதான், எமிலிஜோலாவால் நானாவுக்காக அனுதாபத்துடன் போராடியவரால் டிரைபசுக்காகப் போராட முடிந்தது. மற்றவர்கள். "மேதை" என்ற புகழ்பெற மேட்டுக் குடியினரின் பாத சேவை செய்தனர்; அரண்மனைக்கு ஆலாத்தி எடுத்தனர்; ஆலயப் பூசாரிக்கு அன்பாபிஷேகம் செய்தனர். ஜோலா, மக்களுக்காக. ஒதுக்கப்பட்ட நசுக்கப்பட்ட, கொடுமைப் படுத்தப்பட்ட மக்களுக்காக எழுதினார்? எழுதினார் என்றால் போராடினார் என்றே பொருள். அவருடைய எழுத்து, வீரன் கைவாளை விட வலிவுடையது. உள்ளத்தை உலுக்கக் கூடியது உலகே எதிர்த்தாலும் அஞ்சாது போரிடும் எழுத்துக்கள் மமதைக் கோட்டைகளைத் தூளாக்கும் வெடிகுண்டுகள். "நீதி" வேண்டும் என்று ஜோலாவின் பேனா எழுதிற்று, என்ன நேரிட்டது? "நீதி" கிடைத்தது மந்திரி சபைகளை அவருடைய பேனாமுனை மாற்றி அமைத்தது, பல மண்டலங்களிலே. மறக்கப்பட்டுப் போன டிரைபசுக்கு, நண்பர்களைத் திரட்டிற்று. ஒரு பெரும்படை திரட்டிவிட்டார், பேனா மூலம். எங்கோ தீவிலே. ஏக்கத்துடன், "நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே என்று கதறிக்கொண்டிருநத டிரைபசுக்கு, வெற்றி; விடுதலை! பதினொரு ஆண்டுகள் பராரியாகப் பாழும் தீவில் வதைப்பட்டவனுக்கு, வெற்றி. விடுதலை; ஒரு ஜோலாவின் எழுத்தால்!!
🞸🞸🞸
பிரெஞ்சு ஜெர்மன் சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருந்தசமயம், பிரெஞ்சு ஒற்றனொருவன் ஜெர்மன்